Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பயம் இருக்கும் வரை தான் பக்தி இருக்கும்!
#1
தென்கச்சி சுவாமிநாதன்: அது 1985ம் வருஷம்ன்னு நினைக்கிறேன். அப்ப நான் நெல்லை வானொலி நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னோட நண்பர் ஒருத்தர் ஒரு புகைப்படத்தை கொண்டு வந்து, என்னிடம் காண்பித்து ஒரு அதிர்ச்சியான தகவலைச் சொன்னார்.
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் பகுதியில் அகத்தியர் மலை, பொதிகை மலை உள்ளது. என்னோட நண்பர் அகத்தியர் மலைக்குப் போய், அங்குள்ள அகத்தியர் அருவியில் குளித்து முடித்து ஞாபகார்த்தமாக அந்த மலை தெரியுற மாதிரி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


வீட்டிற்கு வந்து அந்த புகைப் படத்தை கழுவிப் பார்த்தால் ஆவி தெரியுற மாதிரி மலைக்கு மேலே வெள்ளையா சின்ன வெளிச்சம் அந்த புகைப்படத்தில் இருந்தது. பேயோ, பிசாசோ என அலறியபடி என்னிடம் கொண்டு வந்து காட்டினார். முதல்ல நான் கூட குழம்பிப் போயிட்டேன். சரி, விசாரிக்கலாமேன்னு கலர் லேபிலே போய் கேட்டால், "அது ஏதோ பிரிண்டிங் மிஸ்டேக்காகி விட்டது; வேற பிரிண்ட் போட்டுத் தர்றோம் சார்' என்றனர்.

இன்னொரு சம்பவம்... ஒவ்வொரு கிராமத்திலயும், ஒவ்வொரு பேய் பிரபலம். எங்க ஊர்ல கொள்ளி வாய்ப் பிசாசு பயம் ஜாஸ்தி. கிராமத்தில் கடலை பயிர் போட்டிருப்பாங்க. நடு ராத்திரியில், திருட்டுப் பசங்க கடலையைப் பறிச்சுட்டு போயிடக் கூடாதுங்கறதுக்காக இந்த கொள்ளிவாய்ப் பிசாசு பயத்தை ஏற்படுத்தியிருந்தாங்க.

ராத்திரியில போனா கடலைக் காட்டுல நெருப்பு எரியும். பக்கத்துல விசாரித்தால் பிசாசு தான் தீயை தின்னுதுன்னு சொல்வாங்க. கடலைக்கு காவல் காக்கற ஆளுங்கதான் நெருப்பை வச்சு பயமுறுத்தியிருக்கின்றனர் என்று கொஞ்ச நாள் கழித்துதான் எனக்கே விவரம் புரிஞ்சது.

பொதுவாக இந்த மாதிரி வதந்தி பரப்பும் விஷயத்தை மனநல மருத்துவர்கள் "டாமினோ எபெக்ட்' என்கின்றனர். அதாவது, எண்ணங்கள் ஒருத்தர்கிட்டயிருந்து இன்னொருத்தர்கிட்ட போகும். வதந்தியும் இந்த மாதிரி தான் வேகமாகப் பரவும். அதனால மூட நம்பிக்கைகள் ஏற்படும். மனிதன் இருக்கும் வரை பயம் இருக்கும்; பயம் இருக்கும் வரை தான் பக்தியும் இருக்கும்.

நன்றி: தினமலர்
Reply


Messages In This Thread
பயம் இருக்கும் வரை தான - by சாமி - 10-06-2003, 07:23 PM
[No subject] - by shanmuhi - 10-07-2003, 09:58 AM
[No subject] - by kuruvikal - 10-07-2003, 06:00 PM
[No subject] - by vaiyapuri - 10-08-2003, 12:58 PM
[No subject] - by shanmuhi - 10-08-2003, 02:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)