Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தந்தை தற்கொலை
#1
<b> சுனாமியால் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த தந்தை தற்கொலை</b>


சுனாமி பேரலையில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த தந்தை ஒருவர் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக் கிழமை மட்டக்களப்பு நாவலடியில் இடம்பெற்றுள்ளது.

நாவலடியைச் சேர்ந்த தம்பாப்பிள்ளை யோகேஸ்வரன் என்பவரே உயிரிழந்தவராவார். சுனாமி பேரலையினால் மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்த இவர் உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். தமது முச்சக்கர வண்டி உட்பட சொத்துகளை உறவினர்களிடம் கையளித்து இவர் நாவலடி காயத்திரி பீடத்திற்கு அருகில் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனைக்கண்ட பொது மக்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற வேளை உயிரிழந்தார். இவர் நஞ்சருத்தியே மரணம் அடைந்ததாக தெரியவந்தது.
Reply


Messages In This Thread
தந்தை தற்கொலை - by hari - 07-10-2005, 03:38 AM
[No subject] - by Malalai - 07-11-2005, 01:43 AM
[No subject] - by Mathan - 07-11-2005, 08:52 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)