Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குழந்தைகளை கொல்லும் தாய்மார்கள்
#1
இத்தாலியில் தாய் மார்கள் வணங்கத்தக்க வாழும் தெய்வங்களாக போற்றிப் பாராட்டப்படுகின்றனர். அப்படிப்பட்ட நாட்டில் சமீப காலமாக பெண்கள் தங்கள் குழந்தைகளைக் கொல்வது அதிகரித்துள்ளது. இதனால், அம்மாக் கள் மீது இத்தாலியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை சீர்குலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள நகரமான லெக்கோவைச் சேர்ந்தவர் மரியா பேட்ரிஜியோ (29). இந்தப் பெண் கடந்த ஜூன் மாதத்தில் தனது ஐந்து மாதக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றார்.

பின்னர் வீட்டில் திருடர்கள் புகுந்து பொருட்களை கொள்ளையடித்து விட்டு, தனது குழந்தையையும் கொன்றது போன்ற தோற்றத்தை <உருவாக்கினார். ஆனால், போலீஸ் விசாரணையில் உண்மை அம்பலமானது.

இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அழகுசாதன பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 23 வயது பெண் ஒருவர் தனது மகளைக் கொன்றார்.

பின்னர் தன் கையிலேயே பிளேடால் அறுத்துக் கொண்டு கொலையை மறைக்க வேறு விதமாக நாடகமாடினார்.

அதேநாளில் நடந்த மற்றொரு சம்பவத்தில் கடலோர நகரமான ரிமினியில் வசிக்கும் ஒரு பெண் தனது மகளை ஜன்னலில் இருந்து துõக்கியெறிந்து கொன்றார். இந்த சம்பவங்கள் இத்தாலி நாட்டை உலுக்கியுள்ளன.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
குழந்தைகளை கொல்லும் தாய்மார்கள் - by SUNDHAL - 07-10-2005, 02:28 AM
[No subject] - by வெண்ணிலா - 07-10-2005, 03:58 AM
[No subject] - by kuruvikal - 07-10-2005, 10:05 AM
[No subject] - by Vaanampaadi - 07-10-2005, 06:06 PM
[No subject] - by kuruvikal - 07-10-2005, 11:42 PM
[No subject] - by Malalai - 07-11-2005, 01:45 AM
[No subject] - by Mathan - 07-11-2005, 09:26 AM
[No subject] - by sinnappu - 07-12-2005, 02:25 PM
[No subject] - by MUGATHTHAR - 07-12-2005, 04:55 PM
[No subject] - by வினித் - 07-12-2005, 07:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)