07-10-2005, 02:19 AM
லண்டன் தொடர் குண்டு வெடிப்பில் இரட்டை மாடி பஸ் ஒன்றும் வெடித்து சிதறியது. இச்சம்பவத்தில் பஸ் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உயிர் பிழைத்ததும் ஓடிவிடாமல் காயமடைந்தவர்களுக்கு உதவியும், உயிரிழந்தவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டார்.
லண்டன் சுரங்க ரயில்பாதை உட்பட 4 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. மக்களின் முக்கிய போக்குவரத்து தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இரட்டை மாடி பஸ் ஒன்றும் அடக்கம். பஸ்சில் நடந்த குண்டு வெடிப்பில் அதில் பயணம் செய்தவர்களில் 13 பேர் பரிதாபமாக பலியாயினர். அதிர்ஷ்டவசமாக பஸ் டிரைவர் உயிர் தப்பினார். உயிர் பிழைத்ததும் தப்பித்தோம் என்று ஓடி விடாமல் மனித நேயத்துடன் அவர் பணியாற்றியுள்ளார்.
இது குறித்த செய்தி பஸ் கம்பெனியின் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
49 வயதாகும் அந்த டிரைவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. டிரைவர் கூறியதாக வெப்சைட்டில் வெளியிடப் பட்ட தகவல்கள் வருமாறு:
சுரங்க ரயில் பாதைகளில் குண்டு வெடிப்பு நடந்ததால் பஸ் வழித்தடம் மாற்றி விடப்பட்டது. பஸ் சென்று கொண்டு இருக்கும் போது முதலில் பயங்கர சப்தம் கேட்டது. அப்போதுதான் பஸ்சில் குண்டு வெடித்து ஏராளமானவர்கள் கொல்லப்பட்டதை அறிந் தேன். அனைத்தும் என்பின் னால் நடந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முயன்றேன். குண்டுவெடிப்பில் ஏராளமானோர் காயமடைந்தனர். என்னைச் சுற்றிலும் பலர் இறந்து கிடந்தனர். முதலில் நான் எப்படி உயிர் பிழைத்தேன் என எண்ணினேன்.
போலீசார் என்னை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தினர். அடுத்து தாக்குதல் ஏதும் நடக்கமால் இருக்க நடவடிக்கையில் இறங்கி இருந்தனர். காயமடைந்தவர்களுக்கு உதவியும், பலியானவர்களை மீட்கும் நடவடிக்கையி<லும் ஈடுபட்டேன். இத்தகைய ஆபத்திற்குப் பின்பும் எனது வேலையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. நானும், லண்டனின் மற்ற டிரைவர்களும் தொடர்ந்து வேலையில் ஈடுபடுவோம். இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம். எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட மாட்டோம். இவ்வாறு டிரைவர் கூறியதாக வெப்சைட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............