06-21-2003, 09:22 AM
எட்டி உதைக்கும் கால் எடுத்து
கழுவியொரு முத்தமிட்டுக் கிடந்ததெம் முற்றம்
ஆளவருவோரின் தோள்தழுவத்
துவண்டிருந்ததெம் முற்றம்
வேர்கள் தொழுப்பார்த்து விழுதுகளும் கையெடுத்துக்
காலைக் கழுவிக் கண்துயின்ற முற்றமிது
பாலை, நெடும்பாலைப் பற்றையெனக்
கிடந்தமுற்றம்
வந்தாரெம் சிறுவ வரிசை
வருகையின் பின்
மந்தாரம் போட்டு மழைபொழியும் முற்றமெனச் செய்தார்
செகத்தையிவர் திகைக்க வைத்து விட்டார்கள்
பொய்யாய்க் கிடந்த புலவைப் புதுநிலமாய் உழுதார்
விழுதெறிந்தார் ஊர்முழுதும் விளைச்சலென
எழுதும் படியாக எப்படியோ செய்துவிட்டார்
ஊரழிப்பேன்
உன்னூரில் உலையேற்ற விடமாட்டேன்
சீரழிப்பேன்
உன்னைத் திசையெங கும் சிதறவைப்பேன்
நீவணங்கும் சிவபுரத்தைத் தீயிடுவேன்
பேரழிப்பேன்
தமிழர் நிலமெல்லாம் நானழிப்பேன்
என்றெழுந்தான் எங்கள் எதிரி
அவனையெதிர் கொண்டாரெம் வீரக்குழந்தைகள்
நெருப்பாகி நின்றெதிர்த்து இந்தோ நிலமுறங்கும் மாவீரா
கல்லறைக்கு என்கண்ணீர்க் காணிக்கை
இக்கவிதைச் சொல்லடுக்கையெல்லாம்
சோடித்தேன் கல்லறையில்.
புதுவை இரத்தினதுரை
கழுவியொரு முத்தமிட்டுக் கிடந்ததெம் முற்றம்
ஆளவருவோரின் தோள்தழுவத்
துவண்டிருந்ததெம் முற்றம்
வேர்கள் தொழுப்பார்த்து விழுதுகளும் கையெடுத்துக்
காலைக் கழுவிக் கண்துயின்ற முற்றமிது
பாலை, நெடும்பாலைப் பற்றையெனக்
கிடந்தமுற்றம்
வந்தாரெம் சிறுவ வரிசை
வருகையின் பின்
மந்தாரம் போட்டு மழைபொழியும் முற்றமெனச் செய்தார்
செகத்தையிவர் திகைக்க வைத்து விட்டார்கள்
பொய்யாய்க் கிடந்த புலவைப் புதுநிலமாய் உழுதார்
விழுதெறிந்தார் ஊர்முழுதும் விளைச்சலென
எழுதும் படியாக எப்படியோ செய்துவிட்டார்
ஊரழிப்பேன்
உன்னூரில் உலையேற்ற விடமாட்டேன்
சீரழிப்பேன்
உன்னைத் திசையெங கும் சிதறவைப்பேன்
நீவணங்கும் சிவபுரத்தைத் தீயிடுவேன்
பேரழிப்பேன்
தமிழர் நிலமெல்லாம் நானழிப்பேன்
என்றெழுந்தான் எங்கள் எதிரி
அவனையெதிர் கொண்டாரெம் வீரக்குழந்தைகள்
நெருப்பாகி நின்றெதிர்த்து இந்தோ நிலமுறங்கும் மாவீரா
கல்லறைக்கு என்கண்ணீர்க் காணிக்கை
இக்கவிதைச் சொல்லடுக்கையெல்லாம்
சோடித்தேன் கல்லறையில்.
புதுவை இரத்தினதுரை

