07-08-2005, 10:43 PM
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இப்படியானதொரு குண்டுவெடிப்பு இலண்டனில் நிகழ்ந்திருக்கிறது என்றால் அத்தகைய ஒரு குண்டுவெடிப்பை நிகழ்த்த தூண்டிய காரணி என்ன என்பதை பிரித்தானிய மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
அரசியல்வாதிகள் பொய்களைக் கூறியே ஈராக் மீது போர்தொடுத்தனர் அதன் விளைவே இந்த இலண்டன் குண்டுவெடிப்பு
இந்தக் குண்டுவெடிப்பின் விளைவாக பிரித்தானிய மக்கள் இலண்டன்வாழ் முஸ்லீம்களை சந்தேகக்கண்ணோடு பார்க்கத்தொடங்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது தொடர்பாக தங்கள் நிலையை முஸ்லீம் சமுகம் விளக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது
இது அல் கய்டா வின் தாக்குதலாக இருக்கமுடியாது ஆனால் அல் கய்டாவின் விசுவாசிகள் அல்லது அதன் கொள்கைகளால் உந்தப்பட்ட வேறு குழுக்கலாலேயே நடத்தப்பட்டிருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள் அதுவும் பிரித்தானியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்களாலேயே நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள். தான் பிறந்து வளர்ந்த நாட்டையே தாக்கத் துணியுமளவுக்கு அவர்களை தூண்டிய காரணி என்ன?
இவ்வளவுகாலமும் நடக்காத ஒன்று இப்பொழுது நிகழ்ந்திருக்கிறது இதற்காக அமெரிக்காவுடன் சேர்ந்து பயங்கரவாதத்தை அழிப்போம் என கங்கணங்கட்டுவது பிரச்சினையை சுமுகமான வழியில் தீர்க்க வழிவகுக்காது
பயங்கரவாதத்தை யுத்தத்தால் வெல்லமுடியும் என்பது யுத்தத்தை நாட்டிற்குள்ளே கொண்டுவரவே வழிவகுத்துள்ளது