07-08-2005, 01:17 PM
நாரதர் அமெரிக்காவில் செப் 11 தாக்குதல்கள் நடைபெற்று பல வருடங்களாகிவிட்டது. அதன் பாதிப்புக்கள் மக்கள் மனதை விட்டு மறைந்து கொண்டிருக்கின்றன. அதனால் அங்கு யுத்தத்திற்கு ஆதரவு குறைய கூடும். இங்கு அப்படியல்ல. அமெரிக்கா மீதான தாக்குதலை தொடர்ந்து அவர்கள் மேல் அனுதாபம் கொண்டிருந்த பிரிட்டிஷ் மக்கள் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய போதும் அவர்களுடன் பிரிட்டிஷ் படைகள் இணைந்த போதும் ஓரளவு ஆதரிக்க செய்தனர். ஆனால் தொடர்ந்து ஈராக் மீது போர் தொடர்ந்த போது செப் 11 தாக்குதல்களால் பாதிக்கப்படாத இந்நாட்டு மக்களிடன் ஏன் நாம் ஈராக்கியில் யுத்தம் புரியவேண்டும்? ஏன் நமது பிள்ளைகள் அங்கு உயிர் துறக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதுவே யுத்தத்திற்கு எதிரான எதிர்ப்பாகவும் மாறியது.
ஆனால் இப்போது நேற்றய தாக்குதலில் பிரிட்டிஷ் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதன் வலியை வேதனையை கண்கூடாக கண்டு அனுபவிக்கின்றார்கள். இது அவர்களுக்கு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் அவர்களின் பிண்னணி மேல் ஒரு வெறுப்புணர்வையும் ஆத்திரத்தையுமே ஏற்படுத்தியிருக்கின்றது. அது காரண காரணிகளை ஆராயாமல் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் யுத்தம் போன்றவற்றை ஆதரிக்க செய்வதுடன் அதனை செய்யும் பிளேயரின் கரங்களை பலப்படுத்தும்.
உதாரணத்திற்கு ஒரு வீட்டில் அப்பா பக்கத்து வீட்டுகாரருடன் வீண் சண்டைக்கு போகும் போது மற்றய குடும்ப உறுப்பினர்கள் ஏன் வீண்சண்டை வேண்டாம் என்று அப்பாவை கண்டிப்பார்கள். அதன் பின்பு பக்கத்து வீட்டுக்காரர் வீட்டிற்கு வந்து அந்த வீட்டின் கடைக்குட்டியை ஆத்திரத்தில் அடி அடி என்று அடித்துவிட்டால் இப்போது வீட்டின் மற்றய உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்? அப்பா சண்டைக்கு போனதால் தான் இது வந்தது என்று ஆற அமர இருந்து அலசி ஆராய்ந்து நியாய அநியாயம் பேசுவார்களா அல்லது பக்கத்துவீட்டுகாரன் வீணாக கடைக்குட்டியை அடித்துவிட்டான் என்று ஆத்திரம் கொள்வார்களா? அந்த வீட்டில் அப்பா செய்தது நிச்சயம் அநியாயம் தான் தான் அதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் பக்கத்து வீட்டு காரர் வீட்டிற்கு வந்து ஏதுமறியாத தம்பியை அடித்தவுடன் எப்படி மனப்போக்கு மாறுகிறது பாருங்கள்?

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>