07-08-2005, 12:47 PM
யுத்தம் வேறுபகுதியல் நடைபெறும் போது அதைப் பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாத பிரித்தானியர்கள் தம் மீது ஒரு யுத்தம் வந்தால் அதை எதிர்க்க அரசிற்கு முழு ஆதரவையும் கொடுப்பதில் பிரித்தானியர்கள் பின்னிற்பதில்லை. 2ம் உலகமகா யுத்தம், போக்லன்ட் யுத்தம் பின்னர் ஐஆர்ஏ மீதான யுத்தம். பயங்கரவாதம் பிரித்தானியாவிற்கு புதிய விடயமல்ல. மதன் கூறியது போல் முதலில் ஈராக் மீதான யுத்தத்தை மக்கள் விரும்ப்வில்லைதான். ஆனால் இனி நிலைமை அப்படி இருக்காது. அமரிக்கர்களுடன் ஒப்பிடுகையில் பிரித்தானியர்கள் நாட்டுப்பற்று அதிகமானவரர்கள். செப்டெம்பர் 11 இற்கு பின்னர்தான் அமரிக்கா ஈராக் முpதான யுத்தத்தை ஆரம்பித்து. ஆப்கான் மீது தாக்குதல் நடாத்தியது. ஆனால் அமரிக்கர்கள் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். யாரோ ஆயிரம் பேர் இறந்து போனார்கள் அவ்வளவுதான். ஆனால் பிரித்தானியர்களின் தேசப்பற்று அவர்களை கால கால மாக ஒன்றிணைத்து வந்துள்ளது. மார்கிரட் தச்சர் 3 தரம் பதவிக்கு வர ஓரு யுத்தம் காரணமாயிருந்தது. 2ம் உலக மகா யுத்த காலத்தின் பிரதமர் வின்ஸ்ரன் ஜேர்ஜில் இன்றும் மகக்ள் மத்தயில் பிரபலமானமைக்கு காரணம் 2ம் உலக மகா யுத்தமே. அவரின வாக்கு பிரித்தானிய மக்களின் வேத வாக்கு அது : பிரித்தானியிர்கள் ஒரு போதும் அடிபணிவதில்லை, அது எப்போதும் நடக்காது.
Never give in. Never. Never. Never.
Never give in. Never. Never. Never.

