10-05-2003, 10:19 AM
kuruvikal Wrote:அடுத்தது விபத்து மரணம்....அதெப்படி விபத்து நடந்தது... வேண்டும் என்று நடத்தப்பட்டதா...அல்லது கவலையீனத்தால நடந்ததா...நீதிபதி என்ன கடவுளே...தீர்க்கசரிசனமாப் பதில் சொல்ல..விபத்து நடக்கேக்க பாத்தவனுக்குத்தான் தெரியும் எப்படி நடந்ததெண்டு....வீட்டுக்க இருந்த நீதிபதிக்கு பொதுவா விபத்தெண்டு தானே தெரியும் ...கொழும்பில இருந்து போன சின்னப்பிள்ளையும் சொல்லும் உது விபத்தெண்டு..உதுக்கெல்லாம் ஒரு நீதிபதி...! பக்கச் சார்பில்லாமல் விசாரணை வச்சுப் பாருங்கோ உண்மை வரும்...அப்படி வருமெண்டால் செம்மணிக்கால எவ்வளவோ வந்திருக்க வேணும்...எல்லாத்தையும் அப்படியே அமுக்கிப் போட்டாங்கள்...100 பேரைக் கொன்ற மிலோசவிச்சுக்கு சர்வதேச நீதிமன்றில விசாரணை...1000 பேரைக் கொன்ற சந்திருக்காவுக்கு அமெரிக்க பாதுகாப்பு....! என்னையா நீதியும் நீதிபதியும்...! அமெரிக்காவின் அட்டகாசத்தில நீதி அழிந்தே இப்ப பல வருசங்களாச்சு...!நன்றி குருவிகாள்.. ரென்ஷன் உள்ள இடத்தில் டென்ஷனை தவிர்ப்பதற்கான வழிமுறைதேவையேயன்றி தூண்டுவதற்கான நடவடிக்கைகள் இருக்கப்படாது என்பது எனது கருத்து. பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இப்படியான ஒரு சம்பவம் நடந்தால் அதை தணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால்தவிர பொதுமக்களின் உயிரிழப்புக்கள் தவிர்க்கமுடியாததாகிவிடும். பொதுமக்களில் உண்மையான கருசனை உள்ளவன் எவனும் தணிப்பதற்கான முயற்சியையே மேற்கொள்ளுவான். இச் சம்பவத்தில் வேறு உயிரிழப்புக்கள் இல்லாமலப்போனது அதிஸ்டவசம்.. இதை ஒரு பாடமாக எடுப்பார்களா..
மேலும் பக்கசார்பில்லா விசாரணையென்று வரும்போதும் மனித உரிமை மீறல் என்று வரும்பொழுதும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசாங்கத்துக்கு கலவரங்களை அடக்க அவர்களுக்கு அதிகாரம் இருக்கும். அவர்களுக்கு உள்நாட்டில் செய்யும் அடக்குமுறை கொலைகளுக்கு எப்போதும் வெளிநாடுகளின் அங்கீகாரமும் இருக்கும். அங்கீகாரமில்லாத ஒரு அமைப்பு அதை செய்யும்போதுதான் மனித உரிமை மீறல்க் கொலையாக அமையும்.
செம்மணி மர்மம் நொவெம்பர் 14 ஆம்திகதி தொடங்கி அவிழ்க்கபடலாம். காணாமல்போனோர் பட்டியல் பலதுக்குத் முடிவு கிடைக்கலாம்..
Truth 'll prevail

