07-07-2005, 02:42 PM
லண்டன் நகரில் தொடர் குண்டு வெடிப்புகள், குறைந்தது பத்து பேர் பலி
<img src='http://news.bbc.co.uk/media/images/41277000/jpg/_41277449_bus_close_reader.jpg' border='0' alt='user posted image'>
லண்டன் நகரில் இன்று வியாழக்கிழமை போக்குவரத்து நெரிசல் நிறைந்த காலை நேரத்தில் ஏழு வெவ்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன.
குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
மத்திய லண்டன் பகுதியின் வெவ்வேறு இடங்களில் போக்குவரத்து மையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல்களின் காரணமாக லண்டன் நகர போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. அலுவலகங்களுக்கு வருவோர் பெரிதும் சிரமத்துக்குள்ளாயினர்.
பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் , ஜி.8 செல்வந்த நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு நடந்து கொண்டிருந்த நிலையில் இத்தாக்குதல்கள் நடந்தன. மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அவசரமாக லண்டன் திரும்புவதாக அறிவித்தார். மாநாடு தொடர்ந்து நடைபெறுகிறது.
நன்றி - பிபிசி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>