07-07-2005, 02:03 PM
இந்தக் குண்டு வெடிப்பின் இலக்கு பொதுமக்களும் அவர்களின் அன்றாட வாழ்க்கையும் என்பது தெளிவாகத் தெரிகிறது. பொது மக்களை தாக்குவதன் மூலம் அந்நாட்டு அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து இசுலாமிய மேலாதிக்கத்தை மத்திய கிழக்கு நாடுகளில் நிலைநாட்டலாம் என்ற இலக்கு.
அதே நேரம் ஜி-8 கூட்டத்திற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் கிளனீகலில் கூடியிருக்கும் இவ்வேளை உலக ஊடகங்களின் ஒலிவாங்கியும் கமராவும் பிரித்தானியாவை நோக்கியே இருக்கும்.
இந்த நேரத்தில் தாக்குதல் நடத்தினால் அது உலகத்தின் கவனத்தை இலகுவாக ஈர்க்கும் என்பதும் தாக்குதல் நடத்தியவர்களின் இலக்கு
தற்கால பிரித்தானிய சந்ததி யுத்தம் குண்டுவெடிப்பு என்பவற்றை தொலைக்காட்சியிலும் சினிமாவிலும்தான் பார்த்திருப்பார்கள்
யுத்தம். குண்டுவெடிப்பு. மக்களின் அவலம். என்பவற்றை இன்று அவர்கள் ஓரளவாவது உணர்ந்திருப்பார்கள். ஈராக் மட்டுமல்ல மற்றய பல நாடுகளில் குண்டு வெடிப்புகளில் மக்கள் எவ்வளவு துயரங்களை அனுபவிக்கிறார்கள். யுத்தம் எவ்வளவு பாரதூரமான விளைவுகளைத் தரும் என்பதை, ஆயுதம் விற்கும் இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஈராக்கிலும் ஈழத்திலும் வெடிக்கும் குண்டுகளை ஏதோ கணணி விளையாட்டில் குண்டு வெடிப்பதுபோல பார்த்துவிட்டு பேசாமல் இருக்கும் பிரித்தானிய மக்கள் இனியாவது அந்த வேதனையை உணர்வார்களா? அல்லது அரசியல்வாதிகளின் பொய்களை கேட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்ற போர்வையில் தங்கள் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டுவார்களா? :?: