10-05-2003, 06:48 AM
விபத்தா..? கொலையா..?
சடலங்களையோ வாகனங்களையோ விபத்து நடந்த இடத்திலிருந்து அகற்றக்கூடாது இராணுவ பொலீஸாருக்க நீதிவன் கண்டிப்பான உத்தரவு
"விபத்துச் சம்பவம் ஒன்று இடம் பெற்று அதில் ஒருவர் உயிரிழந்தால் அந்த சடலத்தையோ, சம்பவத்துடன் தொடர்புடைய வாகனங்களையோ நீதிவான் பார்வையிட முன்னர் அப்புறப்படுத்தக்கூடாது."
இப்படி பொலீஸாருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார் யாழ் மேலதிக நீதிவான் திருமதி சிறீநிதி நந்தசேகரன்.
பிரதான வீதி, கன்னியர்மடச் சந்தியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்துத் தொடர்பான மரணவிசாரணை அன்று இரவு யாழ் ஆஸ்பத்திரியில் இடம்பெற்றது. அச்சமயம் அங்கு சமுகமளித்திருந்த இராணுவ மற்றும் இராணுவப்பொலீஸ் அதிகாரிகளுக்கே மேற்கண்ட அறிவுறுத்தலை நீதிவான் விடுத்தார்.
சம்பவம் நடந்த இருமணி நேரத் திற்குப்பின்னர் தமக்குத் தகவல் தரப்பட்டமைக்கும் நீதிவான் விசனம் தெரிவித்தார்.
ஒரு விபத்துச் சம்பவம் நடந்து சம்பவத்தில் ஒருவர் இறந்தால், உட னடியாக அதனை நீதிவானின் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டும். விபத்தில் சிக்கியவர் படுகாயம் அடைந்திருந்தால், அவர் காயமடைந்து கிடந்த இடத்தில் அடையாளமிட்ட பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல முடியும்.
இந்தச் சம்பவத்தில் அந்த நடைமுறை முழுமையாக செயற்படுத்தப் படவில்லை. சம்பவ இடத்துக்கு நான் வருவதற்கு முன்பே சடலங்களும் சம்பந்தப்பட்ட டிரக் மற்றும் மோட்டார் சைக்கிளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இவை அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் எப்படி முறையான விசாரணையை நடத்த முடியும்.
எதிர்காலத்தில் இந்த நடைமுறையை இராணுவத்தினரும் இராணுவப் பொலீஸாரும் ஒழுங்காகச் செயற்படுத்தவேண்டும்.
இப்படி நீதிவான் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு நேற்றுக் காலை சென்ற நீதிவான் சம்பவ இடத்தின் வரைபடங்களைப் பெற்றதுடன் சில தடயப் பொருள்களையும் சேகரித்துள்ளார்.
இதன் பின்னர் தமது பங்களாவில் மரணவிசாரணைகளை நடத்தி சாட்சியங்களைப் பதிவு செய்தார்.
[size=14]உயிரிழந்தவர்களுக்கு ஏற்பட்டது விபத்து மரணம் எனத் தீர்ப்பளித்த நீதிவான் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு பூரண அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி இராணுவ பொலீஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட டிரக்கின் சாரதியான கோப்ரல் காமினி திஸநாயக்கவை எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படியும் நீதிவான் உத்தரவிட்டார்.
[size=14]நேற்று வானொலிப் பேட்டியில் அரசியல்த்துறைப்பேச்சாளர் இ.ப. கொலை என வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.. :?: :?: :?:
http://www.uthayan.com/news/newsmain.htm

Truth 'll prevail