06-21-2003, 09:19 AM
நீயும் நானும் சமர்க்களத்தில்
எதிரெதிரே இருந்தோம்.
உனது சுடுகுழல் என்னைக் குறிவைக்க
என்னை நீயும் உன்னை நானும்
கவனித்தபடியே எம் காப்பரண் வாழ்வு
ஓடிக் கழிந்தது.
உனது ஊர் பிடிக்கும்
கடமை சுமந்து என்னைக் கொல்ல வரும்
உன்னை முன்னேற விடாத
எனது காவல்.
சமர்க்களமொன்றில் கட்டுடைத்துப் பாய்ந்து
ஆறாய்ப் பெருகிய
என் குருதிக்கு
உனது ரவையொன்றுதான்
காரணமாக இருந்திருக்கலாம்.
எனதருகே காவலிருந்த தோழி
கண்ணொன்றைப் பறி கொடுக்க
நீதான் சிலவேளை சுடுகுழல் இயக்கியிருப்பாய்.
உனது குழுத்தலைவன் தப்பியோடிய
அன்றைய பாரிய மோதலொன்றில்
எனது குழுத்தலைவி
மண்ணுள் விழி மூடிப்போனாள்.
அவளின் புகழுடலுக்கு ஊர்ச்சனம்
மண்போட்ட அன்று
உங்களது பண்டாவும், சமரவீராவும்
நீங்கள் வெட்டித் தறித்த
தென்னந் தோப்புக்கே
உரமாகிப் போயினர்.
அர்த்தமுள்ள எம் சாவுக்குப் பின்னால்
அருகதையின்றிப் போயிற்று
உன் மாந்தர் உயிர்கள்.
சாவுகளை எம் அருகில்
உறங்க விட்டு நாம் விழித்திருக்க
நீயும் உன்னவரும் அதை
எதிர் கொள்ளப் பயந்து விழித்திருக்க
நித்திரையற்ற எத்தனை இரவுகளில்
விடுமுறையில் போய்த்திரும்பியே வராத
நினைப்போடு நீயும்,
என் உறவுகள் ஊர் போகும்
கனவோடு நானும்
கண் விழித்திருப்போம்.
வெடிமுழக்கச் செய்தி கேட்டு
உனது சுஜாதா விகாரைக்குச் செல்வாள்
எனது அம்மாவும்
தேங்காய், கற்புூரம், புூக்கள் சகிதம்
அரசடிப் பிள்ளையாருக்கு முன்னால்
பிரதட்டை பண்ணியிருப்பாள்.
எப்படி இவற்றையெல்லாம்
சுலபமாக மறக்கமுடியும் பகைவீரா!
இவ வளவு நாளும்
உயிருடனிருக்கிறேன் என்பதையே
நம்ப முடியாமலிருக்கிறது எனக்கு.
இப்போது நீயும் நானும்
சில மீற்றர் து}ரங்களில்
சிரித்தபடியே பார்த்திருக்கிறோம்.
உனது சாவடி தாண்டி வரும் எம்மவரை
சோதனையிட்டுப்
புன்னகையொன்றை வெளியிட்டபடி
போகச் சொல்கிறாய்.
காலம் தான் எவ வளவு மாறிவிட்டது பார்த்தாயா
என்னையும் உன்னையும்
வழிநடத்திய தளபதிகள்
ஒரே மேசையில் உட்கார்ந்து பேச,
உன்னு}ருக்கு என் சனமும்
என்னு}ரில் உன் உறவுகளும்
சுற்றுலா மேற்கொள்ள
எதிரெதிரே இருந்தவரை
அருகருகே வைத்துள்ளதே இக்காலம்.
ஆட்சியும் அரசும்
மாறி மாறிக் கழிய
என் மாந்தர் துயருக்காய் நானும்
உன் உறவுகளின் பசிபோக்க நீயும்
காப்பரண் வேலிக்கு வந்திருந்தோம்.
இப்போது சமாதானக் கனவில்
அதிகம் மகிழ்ந்திருப்பது
நீதான் என்று எனக்குத் தெரியும்.
நித்திய சாவும் புூரணவாழ்வுமாய்
இருந்த உனக்கொரு இடைவெளி.
கார்த்திகை வந்துள்ளது
கண் மழையுள் எமை வீழ்த்திய
காலங்களை விரட்டிய
எம் வீரர்களுக்குச் சுடரேற்ற
கல்லறைக்குச் செல்லவுள்ளேன் நான்.
நீயெப்படி.....
இன்னமும் கம்பி வேலிக்குள்ளா
காலத்ததைக் கடத்துகிறாய்.
இவ வுடல் மண்வீழும் வரைக்கும்
விடுதலைக்காகவே வாழ்கிறேன் நான்.
உயிர்விடும் கடைசித் துளிவரை
அச்சத்துடன் கழிகிறதே உன்வாழ்வு.
உனது துப்பாக்கியும்
எனது சுடுகுழலும்
இப்போது மௌனித்திருக்கிறது.
தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில்
சிரத்தையாயுள்ளது எம்கரங்கள்.
எப்போதும் சுடுகுழல் காவித்திரியும்
சுமை கொண்ட வாழ்வுக்குச்
சொந்தக்காரனே
உனக்காய் யார் ஏது செய்தார்கள்?
எங்கள் தலைவனின் காலத்தில்
விடியும் நாளுக்காய்
கனவுகள் சுமந்தபடி
ஊர்போக முடியாது காத்திருக்கும்
எம் தமிழர் வீடுகளில்
பாதுகாக்கப்பட்டிருக்கிறதா உன்
வாழ்வு?
இரு
எமது இயல்பு வாழ வுக்காய்
எதையும் செய்வதை விரும்பாதவர்கள்
உனது முள்வேலி வாழ்க்கைக்காவது
ஒரு முடிவு கட்டுவார்களா?
உனது சுஜாதாவுக்காக
இளநீர் சீவிப் பிழைப்பு நடத்த
இனியாவது காலம் உன்னை
அனுமதிக்கட்டும்.
பகைவீரா!
இந்த மண் உன்னைத்
தோழமையுடன் வழியனுப்பி
வைக்கவே விரும்புகின்றது.
நான்கு பேர் சுமக்க முடியாது
உப்பிப் பருத்த
வெற்றுடலாகவல்ல.
அம்புலி
எதிரெதிரே இருந்தோம்.
உனது சுடுகுழல் என்னைக் குறிவைக்க
என்னை நீயும் உன்னை நானும்
கவனித்தபடியே எம் காப்பரண் வாழ்வு
ஓடிக் கழிந்தது.
உனது ஊர் பிடிக்கும்
கடமை சுமந்து என்னைக் கொல்ல வரும்
உன்னை முன்னேற விடாத
எனது காவல்.
சமர்க்களமொன்றில் கட்டுடைத்துப் பாய்ந்து
ஆறாய்ப் பெருகிய
என் குருதிக்கு
உனது ரவையொன்றுதான்
காரணமாக இருந்திருக்கலாம்.
எனதருகே காவலிருந்த தோழி
கண்ணொன்றைப் பறி கொடுக்க
நீதான் சிலவேளை சுடுகுழல் இயக்கியிருப்பாய்.
உனது குழுத்தலைவன் தப்பியோடிய
அன்றைய பாரிய மோதலொன்றில்
எனது குழுத்தலைவி
மண்ணுள் விழி மூடிப்போனாள்.
அவளின் புகழுடலுக்கு ஊர்ச்சனம்
மண்போட்ட அன்று
உங்களது பண்டாவும், சமரவீராவும்
நீங்கள் வெட்டித் தறித்த
தென்னந் தோப்புக்கே
உரமாகிப் போயினர்.
அர்த்தமுள்ள எம் சாவுக்குப் பின்னால்
அருகதையின்றிப் போயிற்று
உன் மாந்தர் உயிர்கள்.
சாவுகளை எம் அருகில்
உறங்க விட்டு நாம் விழித்திருக்க
நீயும் உன்னவரும் அதை
எதிர் கொள்ளப் பயந்து விழித்திருக்க
நித்திரையற்ற எத்தனை இரவுகளில்
விடுமுறையில் போய்த்திரும்பியே வராத
நினைப்போடு நீயும்,
என் உறவுகள் ஊர் போகும்
கனவோடு நானும்
கண் விழித்திருப்போம்.
வெடிமுழக்கச் செய்தி கேட்டு
உனது சுஜாதா விகாரைக்குச் செல்வாள்
எனது அம்மாவும்
தேங்காய், கற்புூரம், புூக்கள் சகிதம்
அரசடிப் பிள்ளையாருக்கு முன்னால்
பிரதட்டை பண்ணியிருப்பாள்.
எப்படி இவற்றையெல்லாம்
சுலபமாக மறக்கமுடியும் பகைவீரா!
இவ வளவு நாளும்
உயிருடனிருக்கிறேன் என்பதையே
நம்ப முடியாமலிருக்கிறது எனக்கு.
இப்போது நீயும் நானும்
சில மீற்றர் து}ரங்களில்
சிரித்தபடியே பார்த்திருக்கிறோம்.
உனது சாவடி தாண்டி வரும் எம்மவரை
சோதனையிட்டுப்
புன்னகையொன்றை வெளியிட்டபடி
போகச் சொல்கிறாய்.
காலம் தான் எவ வளவு மாறிவிட்டது பார்த்தாயா
என்னையும் உன்னையும்
வழிநடத்திய தளபதிகள்
ஒரே மேசையில் உட்கார்ந்து பேச,
உன்னு}ருக்கு என் சனமும்
என்னு}ரில் உன் உறவுகளும்
சுற்றுலா மேற்கொள்ள
எதிரெதிரே இருந்தவரை
அருகருகே வைத்துள்ளதே இக்காலம்.
ஆட்சியும் அரசும்
மாறி மாறிக் கழிய
என் மாந்தர் துயருக்காய் நானும்
உன் உறவுகளின் பசிபோக்க நீயும்
காப்பரண் வேலிக்கு வந்திருந்தோம்.
இப்போது சமாதானக் கனவில்
அதிகம் மகிழ்ந்திருப்பது
நீதான் என்று எனக்குத் தெரியும்.
நித்திய சாவும் புூரணவாழ்வுமாய்
இருந்த உனக்கொரு இடைவெளி.
கார்த்திகை வந்துள்ளது
கண் மழையுள் எமை வீழ்த்திய
காலங்களை விரட்டிய
எம் வீரர்களுக்குச் சுடரேற்ற
கல்லறைக்குச் செல்லவுள்ளேன் நான்.
நீயெப்படி.....
இன்னமும் கம்பி வேலிக்குள்ளா
காலத்ததைக் கடத்துகிறாய்.
இவ வுடல் மண்வீழும் வரைக்கும்
விடுதலைக்காகவே வாழ்கிறேன் நான்.
உயிர்விடும் கடைசித் துளிவரை
அச்சத்துடன் கழிகிறதே உன்வாழ்வு.
உனது துப்பாக்கியும்
எனது சுடுகுழலும்
இப்போது மௌனித்திருக்கிறது.
தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில்
சிரத்தையாயுள்ளது எம்கரங்கள்.
எப்போதும் சுடுகுழல் காவித்திரியும்
சுமை கொண்ட வாழ்வுக்குச்
சொந்தக்காரனே
உனக்காய் யார் ஏது செய்தார்கள்?
எங்கள் தலைவனின் காலத்தில்
விடியும் நாளுக்காய்
கனவுகள் சுமந்தபடி
ஊர்போக முடியாது காத்திருக்கும்
எம் தமிழர் வீடுகளில்
பாதுகாக்கப்பட்டிருக்கிறதா உன்
வாழ்வு?
இரு
எமது இயல்பு வாழ வுக்காய்
எதையும் செய்வதை விரும்பாதவர்கள்
உனது முள்வேலி வாழ்க்கைக்காவது
ஒரு முடிவு கட்டுவார்களா?
உனது சுஜாதாவுக்காக
இளநீர் சீவிப் பிழைப்பு நடத்த
இனியாவது காலம் உன்னை
அனுமதிக்கட்டும்.
பகைவீரா!
இந்த மண் உன்னைத்
தோழமையுடன் வழியனுப்பி
வைக்கவே விரும்புகின்றது.
நான்கு பேர் சுமக்க முடியாது
உப்பிப் பருத்த
வெற்றுடலாகவல்ல.
அம்புலி

