10-04-2003, 01:50 PM
nalayiny Wrote:[size=15]குற்றம் கண்டுபிடிக்கும் குணம்
எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
அடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அப்படியொரு அலாதியான
சந்தோஷம். இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக்
கொண்டிருந்தால் நாளடைவில் அது போதை வஸ்து மாதிரி ஆகி, நமது அறிவுப்
பார்வையை குறுகலாக்கிவிடும்.
அடுத்தவர்களுக்காக இல்லாவிட்டாலும் சுயநலமான காரணத்துக்காவது
அடுத்தவர்மீது குற்றம் காண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நம்மில் இப்படியாக எதற்கெடுத்தாலும் குற்றம் காண்பதையே [size=15]ஒரு சிலர் குணமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அதை மாற்றிக் கொண்டு நல்லவற்றை காணும் பக்குவம் எப்போது உருவாகிறதோ, அன்றுதான் விடிவு ஏற்படும்.
[size=15]வாழ்த்துவதற்கெல்லாம் வயது தேவையில்லை.
மனசிருந்தாலே போதும்...............
அன்புடன்
அஜீவன்

