07-06-2005, 11:32 AM
<b>குறுக்குவழிகள் - 94</b>
போய்வந்த பாதை அழித்துவிடுவது எப்படி?
காலையில் இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும்போது வயதுவந்தவர்களுக்கு மாத்திரம் என வகைப்படுத்தப்பட்ட ஓரிரு வெப்தளங்களை ஆர்வம் காரணமாக பார்த்துவிட்டீர்கள். மாலையில் அண்ணன் வந்து கம்பியூட்டரில் உலாப்போகும்போது இதை கண்டுகொண்டால் என்ன நினைப்பார். இப்படி உங்கள் மனம் உங்களை குடையும். என்ன செய்வது? தடம் அழிப்பது எப்படி? இதோ வழி.
நான்கு இடங்களில் அழிவு செய்யவேண்டும்.
1. Delete Internet temporary files
இன்ரநெட் எக்ஸ்புளொரர் பாவிப்பவர்கள் முதலாவதாக இந்த தற்காலிக பைல்களை அழித்துவிடவேண்டும். இந்த பைல்களில் நாம் பார்த்த வெப்தளங்களின் சில உருவங்களும் (cached image) விலாசங்களும் தானாகவே பதியப்படுகின்றன. இவைகள் Gif அல்லது Jpg பைல்களாக பெரும்பாலும் இருக்கும். இன்ரநெட் எக்ஸ்புளொரரில் Tools--> Internet Options--> Delete Files என்பதை கிளிக்பண்ண இந்த பைல்களெல்லாம் அழிந்து போகும்.
2. Clear the History
அட்றஸ் பாரின் வலதுகை முக்கோணத்தை கிளிக்பண்ண வரும் drop drown மெனுவில் உள்ள வெப்தள விலாசங்களையும், இன்ரநெட் எக்ஸ்புளொரரின் Tool Bar இன் History பட்டனை கிளிக்பண்ண தோன்றும் பட்டியலையும் அழிக்கவேண்டும். Tools--> Internet Options-->Clear History என்பதை கிளிக்பண்ண இவைகள் அழிந்து போகும். இன்ரெநெட் டயலக் பொக்ஸ் இல் கீழ் பகுதியில் Days to keep pages in history என்பதன் எதிரில் எத்தனை நாட்களுக்குரிய பக்கங்களின் விலாசங்களை வைத்திருக்க வேண்டும் என நியமிக்கின்றோமோ அத்தனை நாட்களுக்குரிய விலாசங்களே இந்த History பைலில்ல் இருக்கும்.
3. Delete Cookies
Documents and Settings என்ற போல்டரின் கீழ் உப பைல்களாக இந்த Cookies பைல்கள் காணப்படும். Searcha வசதியை பயன்படுத்தி இந்த போல்டரை தேடுங்கள். இரண்டு அல்லது மூன்று போல்டர் காணப்படலாம். அவைகளை திறந்து அவற்றினுள் உள்ள எல்லா பைல்களையும் அழியுங்கள். Index.dat என்ற ஒரு பைல் மட்டும் அழியாது; விட்டுவிடுங்கள். எல்லா Cookies போல்டர்களையும் திறந்து அழித்துவிட்டதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
4. Delete Autocomplete
விலாசங்களை நாம் அட்றஸ் பாரில் அடிக்குமுன் தானாக முன்வந்து இதுதானா விலாசம் என யோசனை கூறும் இந்த வசதியையும் அழிக்கவேண்டும். அல்லது அண்ணர் ஓரிரு எழுத்துகளை அடிக்குமுன் இந்த வசதி நாம் மறைக்க விரும்பும் விலாசத்தை யோசனை கூறுவதாக நினைத்து காட்டிக்கொடுத்துவிடும். Tools--> Internet Options--> Content Tab--> Auto Complete இவைகளை கிளிக்பண்ணி வரும் பெட்டியில் Clear Forms, Clear Passwords என்ற இரு பட்டனையும் அழுத்தி இந்த வசதியை நிறுத்தி விடலாம்.
சரி இப்போது நீங்கள் நிம்மதியாக போய் தூங்கலாம்