Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திட்டமிட்டபடி விண்ணில் இடம்பெற்ற நேரடி மோதல்
#1
அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பிய இம்பெக்டர் என்ற விண் ஆய்வுக்கலம் பூமியில் இருந்து 8.3 கோடி மைல்கள் தூரத்தில் உள்ள டெம்பெல்-1 என்ற வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் சென்று நேற்று திங்கட்கிழமை மோதியது.

வால் நட்சத்திரத்துடன் மோதுவதற்காகவே அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த ஆய்வுக் கலம், 2 மணிநேர பயணத்துக்குப் பிறகு திட்டமிட்டபடி வால் நட்சத்திரத்துடன் மோதியது.


அது மோதிய போது கற்களும், பனிப்பாறைகளும் வால் நட்சத்திரத்தில் இருந்து தெறித்தன. நாம் வாழும் இந்த சூரிய மண்டலம் எவ்வாறு உருவானது என்பதைக் கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் உள்ள நாசா விஞ்ஞானிகள், இந்த மோதலின் மூலம் ஏற்பட்ட தாக்கத்தால் உருவாகியுள்ள விளைவுகளை வைத்து அதனைக் கணிக்க முடியும் என்று கருதுகின்றனர்.

இந்த மோதலுக்காக நாசா செலவு செய்தது 33.3 கோடி டொலர்கள்.

திட்டமிட்டபடி வால் நட்சத்திரத்தின் மீது ஆய்வுக் கலம் மோதியதை, அதனைக் கொண்டு சென்ற விண்கலம் படம் பிடித்து அனுப்பியதைக் கண்ட நாசா விஞ்ஞானிகள் ஒருவரோடு ஒருவர் கட்டித் தழுவி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

இதேவேள, பீப்பாய் அளவுள்ள அந்த விண்கலத்தின் பெயர் `இம்பெக்டர்'. அதை `டீப் இம்பெக்ட்' என்னும் ரொக்கெட் விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து 13 கோடி கிலோ மீற்றர் தூரத்தில் சென்று கொண்டிருக்கும் "டெம்பெல் 1" வால் நட்சத்திரம் இந்தியாவில் மும்பை நகரை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும். அதன் மீது 372 கிலோ எடையுள்ள அவ்விண்கலம் மோதும் போது, ஒரு பெரிய விளையாட்டு மைதானம் அளவுக்கு ஏற்பட்டது.

அந்த மோதலின் போது 5,000 கிலோ கிராம் டி.என்.டி. வெடிமருந்தை வெடிக்கச் செய்வதற்கு இணையான சக்தி வெளிப்படுத்தப்பட்டது.

13 கோடி கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் அந்த மோதல் நிகழ்வதால் பூமிக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படாது. வால் நட்சத்திரத்தின் பாதையிலும் பெரிதாக மாற்றம் ஏதும் நடக்காது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Reply


Messages In This Thread
திட்டமிட்டபடி விண்ணில் இடம்பெற்ற நேரடி மோதல் - by adsharan - 07-06-2005, 08:36 AM
[No subject] - by அருவி - 07-06-2005, 08:42 AM
[No subject] - by அனிதா - 07-06-2005, 10:51 AM
[No subject] - by கீதா - 09-07-2005, 06:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)