07-05-2005, 01:06 PM
சின்னப் பசங்களே போதும் ...
<img src='http://thatstamil.indiainfo.com/images28/cinema/sneha300.jpg' border='0' alt='user posted image'>
இனிமேல் மூத்தோர்களுடன் (மூத்த நடிகர்களுடன்) நடிக்கப் போவதில்லை என்ற 'வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த' முடிவை எடுத்திருக்கிறாராம் சினேகா.
தமிழ் சினிமாவில் இரண்டு வகை ஹீரோக்கள், பல வகையான ஹீரோயின்கள் உள்ளனர். ரொம்ப வருஷமாக நடித்துக் கொண்டிருக்கும் இளமையான ஹீரோக்கள் ஒரு வகை. சின்ன வயசு ஹீரோக்கள் இன்னொரு வகை.
மூத்த நடிகர்கள் வரிசையில் வரும் ரஜினி, கமல் ஆகியோருக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் இருப்பதில்லை. ஆனால் விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன், சரத்குமார் போன்ற இரண்டாம் கட்ட மூத்தவர்களுக்கு ஜோடி கிடைப்பது தான் பெரும் ராமாயணமாக இருக்கிறது.
கமல், ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதில் இந்தக் கால இளசுகளுக்கு இன்னும் கொஞ்சம் கிரேஸ் இருக்கவே செய்கிறது, ஓரிரு 'குட்டீஸ்'களைத் தவிர. ஆனால் மற்ற நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க 'குட்டிப் பாப்பாக்கள்' ரொம்பவே பயப்படுகிறார்கள்.
மூத்த நடிகர்களுடன் நடிக்கவே மாட்டேன் என்று ஜோதிகா, கோபிகா, மீரா ஜாஸ்மின், ஆசின் போன்ற பல நடிகைகள் சபதமே செய்திருக்கிறார்களாம். அந்த வரிசையில் இப்போது சினேகாவும் சேர்ந்துள்ளார்.
<img src='http://thatstamil.indiainfo.com/images28/cinema/senharj200.jpg' border='0' alt='user posted image'>
இதுவரை இவர் பெரிய நடிகர்களுடன் நடித்தது என்றால் அது கமல் மற்றும் அர்ஜூனுடன் மட்டும்தான். பெரும்பாலும் சின்ன வயசு ஹீரோக்களுடன் தான் சினேகா நடித்து வருகிறார். ரஜினியுடன் நடிக்க வந்த வாய்ப்பைக் கூட இவர் நைசாக தவிர்த்து விட்டாராம்.
விதி விலக்காக சின்னா படத்தில் அர்ஜூனுடன் சேர்ந்து நடிக்கப் போக, அதனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் சுனாமியே வந்து போய் விட்டதாம். இதனால் இனிமேல் மூத்த நடிகர்களுடன் நடிக்கவே கூடாது என்ற ¬முடிவுக்கு வந்து விட்டாராம் அம்மணி.
சமீபத்தில் சத்யராஜுடன் ஜோடி போட ஒரு வாய்ப்பு வந்ததாம். வெரி ஸாரி என்று ஸ்ட்ரைட்டாக கூறி தயாரிப்பாளரை அனுப்பி விட்டாராம் சினேகா.
தெலுங்கில் திடீரென வந்த வாய்ப்புகளால் சந்தோஷமடைந்திருந்த சினேகா, அந்த வாய்ப்புகளை த்ரிஷா அலை வந்து பறித்துக் கொண்டதால் கடுப்பாகிப் போய் திரும்பவும் தமிழுக்கே அதிக ¬முக்கியத்துவம் கொடுக்க ¬முடிவு செய்திருக்கிறாராம்.
இந்த இரண்டு 'முக்கியமான' ¬முடிவுகளால் தனக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்து குவியும் என்ற கணக்கில் இருக்கிறார் சினேகா.
தட்ஸ் தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>