Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நெஞ்சம் மறக்குமா
#6
ஓஓஓஓ..
மெதுவாய் மெதுவாய் துடி இருதயமே
தூங்கும் என் தோழன் தூங்கட்டும்
சுகமாய் சுகதாய் தொடு மழைத்துளியே
குமரவேல் அமைதியாய் உறங்கட்டும்
காங்கேசன்கடற்தாயே இதமாகத் தாலாட்டு
என் தோழன் தூங்கட்டும் கனவுகள் வாழட்டும்

நெஞ்சம் முழுதும் நீயே
என் நினைவும் கனவும் நீயே
கண்ணில் காட்சி நீயே
என் கால்கள் உன்வழியே
நட்பின் பொருளும் நீயே
நீ காலம் வளர்த்த தீயே
முதலாய் மனதில் வந்தாய்
உன் முடிவில் பாடம் தந்தாய்
நெஞ்சம் முழுதும் நீயே
என் நினைவும் கனவும் நீயே
கண்ணில் காட்சி நீயே
என் கால்கள் உன்வழியே
கரை தேடி வருகின்ற அலைகள்
கால் சோர்ந்த ஓய்வதுமில்லை
உனைத்தேடி அழுகின்ற மனதில்
சிறு சோர்வு வந்ததுமில்லை
விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்
நினைவுகள் துணையுடன் தொடரும்
விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்
நினைவுகள் துணையுடன் தொடரும்

நெஞ்சம் முழுதும் நீயே
என் நினைவும் கனவும் நீயே
கண்ணில் காட்சி நீயே
என் கால்கள் உன்வழியே

ஒற்றைப்பனை மர நிழலில்
நாம் இருவரும் ஒன்றாய் அமர்ந்தோம்
ஒரு குவளைத் தேனீர் தன்னை
சண்டை போட்டே இருவரும் குடித்தோம்
ஒற்றைப்பனை மர நிழலில்
நாம் இருவரும் ஒன்றாய் அமர்ந்தோம்
ஒரு குவளைத் தேனீர் தன்னை
சண்டை போட்டே இருவரும் குடித்தோம்
மிதிவண்டிப் பயணத்தில் கதை நூறு சொன்னாயே
ஆகாயம் அது தாண்டிப் பல கனவு காண்பாயே
தலைவலி காய்ச்சல் எதுவந்த போதும்
முதல்வரும் மாத்திரை நீ தானே
தலைவனின் பிள்ளை தளர்வதே இல்லை
செயல் மொழி சொன்னதும் நீ தானே


மழை ஒழுகும் வீடுகள் நினைவில்-உன்
இரகசிய அழுகைகள் பார்த்தேன்
ஊரவர் பசியை அறிந்து-நீ
உண்ண மறந்தாய் வேர்த்தேன்
மழை ஒழுகும் வீடுகள் நினைவில்-உன்
இரகசிய அழுகைகள் பார்த்தேன்
ஊரவர் பசியை அறிந்து-நீ
உண்ண மறந்தாய் வேர்த்தேன்
என் மக்கள் என் மக்கள்
மனப்பாடம் செய்வாயே
எம் மக்கள் உயிர்காத்து
உன்னுயிரை மாய்த்தாயே
அசைகின்ற காற்றும் விழுகின்ற மழையும்
இருக்கின்ற வரையும் நீ வாழ்வாய்
நமக்கொரு நாடும் இனிதொரு மொழியும்
மீட்கின்ற வரையும் நாம் ஓயோம்

நெஞ்சம் முழுதும் நீயே
என் நினைவும் கனவும் நீயே
கண்ணில் காட்சி நீயே
என் கால்கள் உன்வழியே
நட்பின் பொருளும் நீயே
நீ காலம் வளர்த்த தீயே
முதலாய் மனதில் வந்தாய்
உன் முடிவில் பாடம் தந்தாய்
கரை தேடி வருகின்ற அலைகள்
கால் சோர்ந்த ஓய்வதுமில்லை
உனைத்தேடி அழுகின்ற மனதில்
சிறு சோர்வு வந்ததுமில்லை
விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்
நினைவுகள் துணையுடன் தொடரும்
விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்
நினைவுகள் துணையுடன் தொடரும்

நெஞ்சம் முழுதும் நீயே
என் நினைவும் கனவும் நீயே
கண்ணில் காட்சி நீயே
என் கால்கள் உன்வழியே


[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Messages In This Thread
[No subject] - by Niththila - 06-28-2005, 08:59 PM
[No subject] - by தூயா - 06-29-2005, 06:11 AM
[No subject] - by அருவி - 06-29-2005, 06:33 AM
[No subject] - by வினித் - 06-30-2005, 06:34 PM
[No subject] - by அருவி - 07-05-2005, 08:15 AM
[No subject] - by அருவி - 07-05-2005, 08:16 AM
[No subject] - by Vishnu - 07-05-2005, 10:35 AM
[No subject] - by வெண்ணிலா - 07-05-2005, 11:13 AM
[No subject] - by அருவி - 07-12-2005, 07:27 AM
[No subject] - by அனிதா - 07-12-2005, 09:30 AM
[No subject] - by அருவி - 08-12-2005, 08:13 AM
[No subject] - by அருவி - 10-14-2005, 07:31 AM
[No subject] - by அருவி - 12-02-2005, 12:48 PM
[No subject] - by தூயா - 12-02-2005, 01:49 PM
[No subject] - by அருவி - 12-09-2005, 06:06 AM
[No subject] - by அருவி - 01-18-2006, 11:38 PM
[No subject] - by அருவி - 01-19-2006, 12:03 AM
[No subject] - by அருவி - 02-02-2006, 12:06 PM
[No subject] - by தூயவன் - 02-02-2006, 03:03 PM
[No subject] - by ப்ரியசகி - 02-02-2006, 07:08 PM
[No subject] - by அருவி - 02-03-2006, 10:04 AM
[No subject] - by தூயா - 02-10-2006, 09:55 AM
[No subject] - by Mathan - 02-10-2006, 10:14 AM
[No subject] - by Niththila - 02-10-2006, 12:59 PM
[No subject] - by I.V.Sasi - 02-10-2006, 07:34 PM
[No subject] - by கந்தப்பு - 03-16-2006, 10:57 PM
[No subject] - by Snegethy - 03-17-2006, 01:59 AM
[No subject] - by Niththila - 03-17-2006, 09:30 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)