07-04-2005, 03:26 PM
Vasampu Wrote:நன்றி மதன் உங்கள் கருத்திற்கு. நான் கள வளர்ச்சியில் எப்படி அக்கறையுள்ளவன் என்பது மோகன் இராவணன் போன்றோருக்கு நன்கு தெரியும். நான் பொதுப்படையாக எழுதவில்லை. சமீப காலமாக களத்தில் நடப்பவை வேதனையளிக்கின்றது. ஒரு விடயத்தை நீக்கினால் யார் நீக்கியது எதற்காக நீக்கப்பட்டது என்பன போன்ற விபரங்கள் எழுதப்படவேண்டும.; மட்டுறுத்தினர்களை செயற்படவேண்டாமென நான் சொல்லவரவில்லை. களத்தில் களமாட வருவோர் ஏதோ வேலையில்லஈமல் வெட்டிப்பொழுது போக்க வரவில்லை. கிடைக்கும் சொற்ப நேரங்களில் கள உறவுகளோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே வருகின்றோம். சிலர் செய்யும் தவறுகளுக்காக எல்லோரும் தேவையில்லாமல் பாதிக்கப்படுவதில் என்ன நியாயமிருக்கின்றது. பெரும்பாலும் பெரிய தவறுகளை எல்லாம் விட்டு விடுகின்றீர்கள் ஆனால் சின்னவிடயங்களில் கை வைக்கின்றீர்கள். உங்களை மதித்து குருவிகள் விடயத்தில் தனிமடல் போட்டேனே?? ஆனால் இன்றுவரை பதிலில்லையே. எனக்குத் தெரியும் உங்களுக்கு சில மட்டுறுத்தினர்களின் தவறுகள் தெரிந்தாலும் அவற்றை சுட்டிக் காட்ட முடியாதநிலை. களம் பிரைச்சினையின் பின்பு தற்போதுதான் செயற்படத் தொடங்கியுள்ளது என்ற கவலை கள உறவுகளுக்கு மட்டுமிருந்தால் போதாது பொறுப்பானவர்களுக்குமிருக்க வேண்டும்.
வசம்பு குருவி பிரைச்சனை ஏற்பட்ட சமயம் நான் களத்தில் இருக்கவில்லை. பின்பு களம் வந்த சிறிது நேரத்தில் தாக்குதல் நடைபெற்று அனைத்தும் அழிந்துவிட்டது. அதனால் உங்களுக்கு பதில் அளிக்கவில்லை மன்னிக்கவும் .அத்துடன் அந்த பிரைச்சனையும் சுமூகமாக தீர்ந்துவிட்டது. சரி இனிமேல் உங்கள் கண்ணில் படும் பெரிய அல்லது சிறிய பிரைச்சனைகளை உடனுக்குடன் அறியத்தாருங்கள். நன்றி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

