07-03-2005, 08:50 PM
தமிழ் தேசியம் ஒன்றை பெறுகின்றபோது அதனை பறிக்கும் சமூகமாக எம்மை பார்க்க வேண்டாம் சம்மாந்துறையில் ரவூப் ஹக்கீம் பேச்சு
(நமது நிருபர்)
பிரசுரிக்கப்பட்டது 04.07.2005
ஒத்துழையாமை இயக்கம் தான் முஸ்லிம் சமூகத்திற்கு இன்று இருக்கின்ற ஒரே ஒரு மாற்று வழியாகும். இந்த ஒத்துழையாமை என்பது அடிமைத்தனமான பொதுக் கட்டமைப்பில் அரசுக்கு முட்டுக்கொடுத்து சமூகத்தின் விடுதலை வேட்கையை துச்சமாக மதிக்கின்ற எவரையும் தொடை நடுங்க வைக்கின்ற ஒத்துழையாமையாக மாற வேண்டும். ஒத்துழையாமையென்ற தடையை மீறி யாரும் போய் பொதுக்கட்டமைப்புப் பதவிகளில் அமர்ந்தால் அவர்களை ஒட்ட நறுக்கிவிடும் போராட்டமாக இது அமைய வேண்டும்.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. கடந்த புதன்கிழமை இரவு சம்மாந்துறையில் நடைபெற்ற பொதுக்கட்டமைப்புக்கு எதிரான கட்சியின் விழிப்புணர்வு கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். அக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது, முஸ்லிம்களின் இன்றைய அரசியல் நிலைமைக்குக் காரணமென்றும் பொறுப்புக் கூற வேண்டியவரென்றும் கூறப்படுபவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் என்பதில் அனைவரும் ஒற்றுமையோடு பேசுகின்றார்கள். பொறுப்பை சுமக்க வேண்டியவன் என்ற அடிப்படையில் பொறுப்பை வேறு யாரிடமும் ஒப்படைக்க தயாரற்ற நிலையிலும் தான் நான் இதைக் கூறுகிறேன். பொறுப்பை ஏற்றவர்கள் போராடத் தயாராக வேண்டும். அப்படித் தயாராகõதவர்கள் தான் பொறுப்பை மற்றவர்கள் மீது சுமத்திவிடுகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் தட்டிக் கேட்கும் அருகதை அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸுக்கு தான் உண்டு. அதற்காக போராடும் தகுதியும், திராணியும், மனத்திடமும் மக்கள் பலமும் முஸ்லிம் காங்கிரஸுக்கு உண்டு. இன்று நடந்திருக்கும் அநியாயத்தின் காலச் சூழல் முக்கியமானது. 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் அரங்கேறிய போது ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அதிகாரம் இருந்தது. அன்று முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனிப் பெரும் அரசியல் இயக்கம் உருவாகியிருக்கவில்லை. அந்தச் சூழலில் முஸ்லிம்களின் மீது எழுதப்பட்ட அடிமைச் சாசனம் கைச்சாத்திடப்பட்டபோது, அந்த அரசாங்கத்தில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை பொம்மைகள், கிளிப்பிள்ளைகள் என்று சொன்னோம். அவர்களிடம் இந்தியாவுக்கு சென்று முறையிடுங்கள் என்று சொன்னபோது அவர்களை எள்ளி நகையாடினோம்.
ஆனால் இன்று என்ன நடந்திருக்கிறது? பலம் வாய்ந்த அறுதிப் பெரும்பான்மையில்லாத நொண்டிக் குதிரையாக தத்தளித்துக் கொண்டிருக்கும் சந்திரிகாவின் அரசிலே 6 முழு அமைச்சர்களும், 4 அரை அமைச்சர்களும் என்ற ரீதியில் முஸ்லிம்கள் உள்ளார்கள். எதிர்க்கட்சியில் முஸ்லிம்களின் ஆகக் கூடிய மக்கள் ஆணையை தனித்துப் பெற்றிருக்கின்ற கட்சியாக மு. கா. இருக்கிறது. அம்பாறை மாவட்டத்தில் மட்டும் மு. கா. தலைவர் போட்டியிட வந்த பின்னணி சாதாரணமான பின்னணியல்ல. தலைவர் திகாமடுல்ல மாவட்டத்துக்கு வந்து போட்டியிட்டால் இம் மாவட்டத்திலே வேறு எந்த மாவட்டமும் காணாத அளவு தேசியப் பட்டியல் ஆசனங்கள் குவிந்திருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் என்ற சக்தியைப் பலவீனப்படுத்த வேண்டும் என்று முண்டியடித்துக் கொண்டு எல்லாக் கட்சிகளும் தேசியப் பட்டியல் ஆசனங்களைக் குவித்துள்ளன. எல்லாமாக அம்பாறை மாவட்டத்தில் 5 தேசியப் பட்டியல் ஆசனங்கள் முஸ்லிம்களுக்கு இருக்கின்றன.
அரசியல் பலம் மட்டக்களப்பு மாவட்டத்திலே வேறு என்றும் இருந்திராத அளவுக்கு குவிந்திருக்கின்ற ஒரு சந்தர்ப்பம் இது. அம்பாறையிலே எதிர்க்கட்சியிலும் ஆளும் கட்சியிலும் ஒன்பது பேர் இருக்கின்றனர். திருமலையில் மு. கா. போட்டியிட்டபோது வரலாறு காணாத வெற்றியாக 65 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலையை சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளுக்கு ஐ. நா. சபையின் விசேட தூதுவர் உலகின் ஏகவல்லரசின் முன்னைய ஜனாதிபதி பில் கிளின்டன் வந்தபோது வட கிழக்கில் முஸ்லிம்கள் தான் ஆகக் கூடுதலாக பாதிக்கப்பட்ட சமூகம் என்றும் அந்த சமூகத்தின் உடன்பாடு இல்லாமல் எந்தப் பொதுக்கட்டமைப்பும் சாத்தியமாகாது என்றும் கூறியிருந்தார். உலக வங்கியின் தலைவரும் இதையே சொல்லிவிட்டுப் போகிறார். இவற்றையெல்லாம் கேட்டு விட்டு முஸ்லிம் சமூகம் நம்பிக்கையோடு இருக்கிறது. ஆனால் இன்று எங்களுடைய அடிப்படை உரிமை அப்படியே குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருக்கிறது.
நாங்கள் ஜனநாயகத்தில் வைத்த நம்பிக்கைக்கு என்ன ஆவது? எங்களுடைய ஜனநாயகம் போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் நாம் நட்டமடைந்திருக்கின்ற போது என்ன செய்தியை அடுத்த தலைமுறைக்குச் சொல்கிறது என்று சர்வதேச சமூகத்தையும் இந்த நாட்டு அரசையும் தமிழ் தேசியத்தையும் கேட்க விரும்புகிறோம். ஜனநாயகத்தில் நாங்கள் வைத்த நம்பிக்கை என்னõவது? எங்களுக்கு வேறு என்ன மாற்று வழி இருக்கிறது? நாம் ஐ. தே. க. வுடன் இருந்தபோதுசமாதானப் பேச்சில் நாம் கலந்து கொள்ள வேண்டும் என்றோம். தனித்தரப்பை நாம் அன்று கேட்கவில்லை. சமாதானப் பேச்சில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்க வேண்டும் என்று ரணிலிடம்கேட்டோம். உடன்படிக்கை செய்தோம். புலிகளுடன் நேர்மையாகப் பேசி உடன்படிக்கை செய்தோம். சர்வதேச சமூகத்திற்கு முன் ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றோம். எங்களை ஏமாற்றியது போதும். இனிமேலும் கொத்தடிமைகளாக எங்களுக்கு எதிராக அடிமைச் சாசனம் எழுதுவதற்கு உங்களுக்கு நாங்கள் எந்த உரித்தையும் தரப் போவதில்லை. எவ்வளவு அபிவிருத்தி தான் வந்து கொட்டினாலும் முஸ்லிம்களுடைய உரிமைப் போராட்டம் என்பது வெற்றி பெற்றேயாகும் என்பதை நிரூபிப்பதற்கு எங்களுடைய சொந்தக் கால்களிலிருந்து போராடுகின்ற தைரியமும் திராணியும் இந்த சமூகத்திற்கு இருக்கிறது. இதனை மேலும் நிரூபிக்கின்ற மாபெரிய மக்கள் இயக்கமாக இதை நாங்கள் மாற்றியாக வேண்டும். வாக்கு வங்கி பாராளுமன்ற ஆசனம், ஆட்சியைத் தீர்மானிக்கின்ற சக்தி என்ற விடயங்கள் இந்த விஷயத்தில் இரண்டாம் பட்சமாகும்.
தமிழ் தேசியம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒன்றைப் பெறுகின்றபோது அதைப் பறிக்க வருகின்ற சமூகமாக முஸ்லிம்களை பார்க்க வேண்டாம். முஸ்லிம் சமூகத்தினர் உங்களுக்கு வருகின்ற வெற்றியை பறிக்க வருகின்றவர்கள் அல்லர். நாங்கள் அடைய வேண்டியதை பெற எங்களுடைய சொந்தக் கால்களில் நின்று போராடும் இயக்கமே இது. உங்களுக்கு கிடைப்பதை நீங்கள் பெற்றுக் கொண்டு போகலாம். எங்கள் பிரதேசத்தின் ஆதிக்கத்தை எமது அரசியல் அந்தஸ்தை துச்சமாக மதித்து நீங்கள் அடைய முடியுமென்று நீங்கள் நினைப்பது தான் மாபெரும் பாதகமாகும். இதைச் செய்ய நினைக்க வேண்டாம். கடைசியாக எங்களுக்கு இருக்கும் கடைசி ஆயுதம், இந்த ஒத்துழையாமை இயக்கம். பொதுக்கட்டமைப்பு விடயத்தில் அதற்கு ஒத்துழைக்கின்ற முஸ்லிம் எவரையும் தடுக்கும் சக்தி போராடத் தெரிந்த எங்கள் கைகளில் தான் இருக்கிறது. பொறுப்பை சுமக்க முடியாது என்று கோழைத்தனமாக யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் கையில் பொறுப்பைத் தந்துவிட்டு இன்று பதவி கதிரைகளிலே தொடர்ந்தும் இருக்கத் தீர்மானித்து விட்டவர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இந்தப் போராட்டம் எங்களுடையது. எங்களுடைய கடைசி எத்தனம் தான் இந்த ஒத்துழையாமை இயக்கம். இதனை வெற்றி பெறச் செய்யும் முயற்சியில் நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>