07-03-2005, 07:58 PM
Vasampu Wrote:சில விடயங்கள் ஊருக்கு மட்டுமே உபதேசம். சென்றமுறை குருவி விடயத்தில் பிரைச்சினைகள் ஏற்பட்டபோது சில உறுதி மொழிகள் சில மட்டுறுத்தினர்களால் வழங்கப்பட்டன. அவை இவ்வளவு சீக்கிரம் காற்றில் விடப்படுமென்பதும் தெரிந்த விடயம் தான். மட்டுறுத்தினர்களாய்ப் பார்த்துத் திருந்தினால்த்தான் களம் உருப்படும். திருந்துவார்களா?????????????
வசம்பு நீங்கள் பொதுவாக சம்பவம் எதையும் குறிப்பிடாமல் குற்றம் சாட்டுவது கவலையளிக்கின்றது. களம் அழிந்து இப்போது தான் மீண்டு வந்திருக்கின்றது. அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள், குருவி விடயமும் சுமூகமாக இருக்கின்றது, இந்த சந்தர்ப்பத்தில் அதனை மீண்டும் கிளறுவதை விட அதை அப்படியே விட்டுவிடுவதே நல்லது என்று நினைக்கின்றேன்.
எதிர்காலத்தில் நீங்கள் ஏதும் தவறு நிகழ்கின்றது என்று தோன்றும் போது உடனேயே அவற்றை தனிமடல் மூலம் சுட்டிகாட்டுங்களேன், அப்படியும் அது கவனிக்கப்படாவிட்டால் களத்தில் எழுதி அனைவர் கவனத்தையும் ஈர்க்கலாம். அனைத்து விடயங்களும் மட்டுறுதினரால் கவனிக்கப்படுவது இயலாதவிடயம் அல்லவா? அவை கள உறுப்பினர்கள் கண்ணில் படும்போது தயவு செய்து தனிமடல் மூலம் சுட்டி காட்டி உதவுங்கள்.
வசம்பு எதிர்காலத்தில் நீங்கள் பொதுவாக குற்றம் சாட்டாமல் உங்களுடைய மனகுறைகளை நேரடியாக அறிய தந்து குறைகளை களைவதற்கும் கள வளர்ச்சிக்கும் உதவுவீர்கள் என நம்புகின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

