07-03-2005, 07:41 PM
kuruvikal Wrote:யாழினி...திருத்தத்தின் பின்னர் தான் எழுதியதை வேறுபடுத்திக் (நிற எழுத்துக்கள் மூலமாகவோ...இல்ல வேறுபட்ட எழுத்து வடிவத்தின் மூலமாகவோ...!) காட்டி இருந்தால் சாத்திருக்கு குழப்பம் வந்திருக்காது....!
ம் பெரும்பாலும் அனைவரும் தணிக்கையின் போது வேறு நிறத்தை உபயோகிக்கின்றோம், இந்த தலைப்பில் தணிக்கை செய்யும் போது யாழினி தற்செயலாக நிறத்தை மாற்றாமல் விட்டிருக்கலாம்.
kuruvikal Wrote:களத்தில் நீக்கப்படும் கருத்துக்களுக்கு இயன்றவரை காரணம் சொல்லப்படும் என்பது ஏற்கப்பட்டு...அதெற்கென ஒரு தனித் தலைப்பு வழங்கப்பட்டிருக்குது....! நிலவனின் கருத்துக்கள் என்ன... சாத்திரியின் கருத்துக்கள் என்ன... குருவிகளின் கருத்துக்கள் என்ன.... எந்த அங்கத்தவரின் கருத்தாயினும் இன்ன காரணத்துக்காகத்தான் நீக்கப்படுகின்றது இல்ல நீங்கப்பட இருக்கிறது என்பதை தோழமையுடன் அறியத் தருவது... களத்தின் மீது கருத்தெழுதும் ஆர்வம் குறையாது தடுக்கப்படவும்... இக் கருத்துக்கள் தொடர்பில் களத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை கள உறவுகள் மதிப்பிடவும் வாய்ப்பாக அமையும் என்பது எமது தாழ்மையான கருத்து...!
நிச்சயமாக .... இயன்றவரை நீக்கப்படும் கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகின்றது. சிலசமயங்களில் ஒரு சிலர் வேண்டுமென்றே பல தலைப்புகளிலும் ஒரேவிதமான விசமத்தனமான செய்திகளை/தகவல்களை இணைக்கும் போது அவர்களின் நோக்கம் குழப்பம் விளைவிப்பது ஒன்றே என்று தெளிவாக தெரிகின்றது, அவ்வாறான சந்தர்ப்பங்களில் மட்டுறுத்தினர்கள் தணிக்கை மட்டும் செய்கிறார்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

