Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எது உண்மை ..?
#2
தேசியக் கொடியை ஏற்றுவதைத் தடுப்பது மனித உரிமைகளை மீறுகின்றசெயல்! கண்காணிப்புக் குழுவிற்கு புலிகள் வலியுறுத்து
ஜ வன்னியிலிருந்து கிருபா ஸ ஜ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2003, 17:45 ஈழம் ஸ
போர்;நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஜெனரல் ட்ரைகேவ் ரெலவ்சன் தலைமையிலான குழுவினருக்கு தமிழீழ தேசியக்கொடி தொடர்பான விளக்கத்தை அளித்த விடுதலைப்புலிகளின் தரப்பு பிரதிநிதிகள் இந்த விடயத்தில் போர்றுத்த கண்காணிப்புக் குழு தலையீடு செய்வது மனித உரிமைகளை மீறும் செயல் என வலியுறுத்தியதாகத் தெரிய வருகிறது.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவது குறித்து ஆராய்வதற்கான விசேட சந்திப்பொன்று நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. இச்சந்திப்பிலேயே மேற்கண்ட கருத்து வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போர்நிறுத்த கண்பாணிப்புக் குழுவின் தலைவர் ரெலவ்சன் தலைமையிரான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, உட்பட வடக்கு-கிழக்கிலுள்ள போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் மாவட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினரும.; அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தலைமையிலான மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட குழுவினரும் இதில் கலந்து கொண்டனர்.

சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்தச்சந்திப்பு, கிளிநெச்சியிலுள்ள புலிகளின் சமாதானச் செயலகத்தில் நடைபெற்றது. யுத்த நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவது தொடர்பாக மாவட்டமட்டத்தில் நிலவுகின்ற வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

தேசியக் கொடியான புலிக்கொடியை ஏற்றுவது தொடர்பாக, போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர் சமீப காலமாக மேற்கொண்டுவரும் கெடுபிடிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் புலிகளின் மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர்கள் மற்றும் புலிகளின் தரப்பு போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு பிரதிநிதிககளுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்;.

தேசியக்கொடியை எமது நிகழ்வுகளுக்கு ஏற்றுவது மக்களின் உணர்வு இதனைக் கண்காணிப்புக்குழுவினர் தடுக்க முயல்வது தமிழ் மக்களுக்கு அவநம்பிக்கையையே ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மக்களின் உணர்வுகளை பாதிக்காத வகையில் கண்காணிப்புக்குழுவினர் செயற்பட வேண்டும் என்றும், புலிகளின் தரப்பு பிரதிநிதிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து தேசியக்கொடி விவகாரத்தில் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலையீட்டைத் தவிர்ப்பது தொடர்பாக இருதரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை இந்தச் சந்திப்பில் சிறுவர்களை ஆட்சேர்ப்பது தொடர்பாக கண்காணிப்பக்குழு முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருவது குறித்தும் புலிகள் தரப்புப் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

ஏற்கனவே இந்த விவகாரங்கள் இணக்கப்பாடு ஏற்பட்டு புனர்வாழ்வு இடைத்தங்கல் முகாம்களை அமைப்பதற்கு யுனிசெப்பும், தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கண்காணிப்புக்குழு இந்த விடயத்தில் தலையிடுவது குறித்து புலிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த விவகாரத்திலும் தலையிடுவது இல்லையென முடிவு செய்யப்பட்டதாகவும் nதிரிய வருகிறது.

நன்றி: நமது ஈழநாடு

http://www.yarl.com/cgi-bin/frame/smartfra...w.eelampage.com
Truth 'll prevail
Reply


Messages In This Thread
எது உண்மை ..? - by Mathivathanan - 10-03-2003, 01:05 AM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 01:06 AM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 01:11 AM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 06:30 AM
[No subject] - by kuruvikal - 10-03-2003, 10:58 AM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 11:19 AM
[No subject] - by kuruvikal - 10-03-2003, 11:38 AM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 11:47 AM
[No subject] - by kuruvikal - 10-03-2003, 04:43 PM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 07:01 PM
[No subject] - by kuruvikal - 10-03-2003, 07:16 PM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 07:23 PM
[No subject] - by kuruvikal - 10-03-2003, 07:35 PM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 07:47 PM
[No subject] - by kuruvikal - 10-03-2003, 09:05 PM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 10:30 PM
[No subject] - by P.S.Seelan - 10-09-2003, 12:53 PM
[No subject] - by Mathivathanan - 10-09-2003, 01:08 PM
[No subject] - by yarl - 10-09-2003, 01:22 PM
[No subject] - by Mathivathanan - 10-09-2003, 01:27 PM
[No subject] - by Paranee - 10-09-2003, 02:08 PM
[No subject] - by Mathivathanan - 10-09-2003, 03:19 PM
[No subject] - by kuruvikal - 10-09-2003, 07:11 PM
[No subject] - by Mathivathanan - 10-10-2003, 01:46 AM
[No subject] - by P.S.Seelan - 10-10-2003, 12:36 PM
[No subject] - by Mathivathanan - 10-10-2003, 01:12 PM
[No subject] - by P.S.Seelan - 10-11-2003, 12:54 PM
[No subject] - by Mathivathanan - 10-11-2003, 04:20 PM
[No subject] - by P.S.Seelan - 10-12-2003, 12:43 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)