Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எது உண்மை ..?
#1
புலிக்கொடி ஏற்றுவது குறித்து கண்காணிப்புக்குழு - புலிகள் பேச்சு
ஜ தமிழ்மாறன் ஸ ஜ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2003, 5:23 ஈழம் ஸ
வடக்கு கிழக்கு மாகாணத்தில் படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இடம்பெறும் வைபவங்களில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட தமிழீழ தேசியக் கொடியை ஏற்றுவது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

கிளிநொச்சியிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் மு.ப. 10 மணிக்கு ஆரம்பித்த சந்திப்பு பி.ப. 1.30 மணி வரை நீடித்தது. போர்நிறுத்த கண்காணிப்பு குழுத் தலைவர் டெலிவ்சனும், புலிகள் தரப்பில் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், மற்றும் யாழ். அரசியல் துறை பொறுப்பாளர் இளம்பரிதி, வவுனியா அரசியற் பொறுப்பாளர் எஸ். எழிலன், திருமலைமாவட்ட அரசியற் பொறுப்பாளர் இ. கௌசல்யன், அம்பாறை மாவட்ட அரசியற் பொறுப்பாளர் பாவா ஆகியோரும் கலந்து கொண்டார்கள். அத்தோடு வடக்கு கிழக்கின் சகல மாவடங்களிலுமுள்ள புலிகள் தரப்பு போர் நிறுத்த கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் மாவட்ட இணைப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இடம்பெறும் வைபவங்களில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட தமிழீழ தேசியக் கொடியை ஏற்றுவது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து போர் நிறுத்த கண்காணிப்பு குழுத்தலைவர் டெலிவ்சன் இச்சந்திப்பில் பிரஸ்தாபித்தார்.

புலிக் கொடியை ஏற்றுவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யுமாறு போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத்தலைவர் டெலிவ்சன் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து அரசியற்துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், தமிழீழ தேசியக் கொடியின் முக்கியத்துவம் குறித்து விளக்கியதுடன் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக தமிழீழ தேசியக்கொடி விளங்குகின்றது என்றும் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறக்கணித்து சிறீலங்கா தேசியக் கொடிக்கு பதிலாக தமிழ் மக்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி வைபவங்களை ஆரம்பிக்கிறார்கள் எனவும் தெரிவித்ததுடன் கொடியின் தத்துவம் தொடர்பாகவும் விரிவாக விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து மேற்படி சந்திப்பு குறித்து போர் நிறுத்த கண்காணிப்பு குழுத்தலைவர் டெலிவ்சன் கருத்து தெரிவிக்கையில்:-

'போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமுலாக்குவது தொடர்பாக புலிகள் தரப்பிலிருந்து எதிர்பார்க்கும் விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியேற்றுவது தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது. புலிகள் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். இது குறித்து நாம் அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்போம்.

மேலும் போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் புலிகள் தரப்பு பிரதிநிதிகள், மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர்களை மூன்று வாரங்களுக்கு ஒரு தடவை கிளிநொச்சியில் சந்தித்து போர் நிறுத்த ஒப்பந்த அமுலாக்கத்தில் எழக்கூடிய நடைமுறைப்பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது என்றார்.

நேற்று பி.ப. 4 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மாவட்ட அரசியற் பொறுப்பாளர்களையும் சமாதான செயலக மாவட்ட இணைப்பாளர்களையும் போர் நிறுத்த கண்காணிப்பு குழுத்தலைவர் சந்தித்தார்.

நன்றி: நமது ஈழநாடு

http://www.yarl.com/cgi-bin/frame/smartfra...w.eelampage.com
Truth 'll prevail
Reply


Messages In This Thread
எது உண்மை ..? - by Mathivathanan - 10-03-2003, 01:05 AM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 01:06 AM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 01:11 AM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 06:30 AM
[No subject] - by kuruvikal - 10-03-2003, 10:58 AM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 11:19 AM
[No subject] - by kuruvikal - 10-03-2003, 11:38 AM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 11:47 AM
[No subject] - by kuruvikal - 10-03-2003, 04:43 PM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 07:01 PM
[No subject] - by kuruvikal - 10-03-2003, 07:16 PM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 07:23 PM
[No subject] - by kuruvikal - 10-03-2003, 07:35 PM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 07:47 PM
[No subject] - by kuruvikal - 10-03-2003, 09:05 PM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 10:30 PM
[No subject] - by P.S.Seelan - 10-09-2003, 12:53 PM
[No subject] - by Mathivathanan - 10-09-2003, 01:08 PM
[No subject] - by yarl - 10-09-2003, 01:22 PM
[No subject] - by Mathivathanan - 10-09-2003, 01:27 PM
[No subject] - by Paranee - 10-09-2003, 02:08 PM
[No subject] - by Mathivathanan - 10-09-2003, 03:19 PM
[No subject] - by kuruvikal - 10-09-2003, 07:11 PM
[No subject] - by Mathivathanan - 10-10-2003, 01:46 AM
[No subject] - by P.S.Seelan - 10-10-2003, 12:36 PM
[No subject] - by Mathivathanan - 10-10-2003, 01:12 PM
[No subject] - by P.S.Seelan - 10-11-2003, 12:54 PM
[No subject] - by Mathivathanan - 10-11-2003, 04:20 PM
[No subject] - by P.S.Seelan - 10-12-2003, 12:43 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)