07-02-2005, 01:44 PM
<b>குறுக்குவழிகள் - 93</b>
Favourites பட்டியலில் உள்ளவற்றை பிரதிபண்ணல்
எமது கம்பியூட்டரின் இயங்குதளத்தை அழித்து மீண்டும் நிறுவும்போது இப்பட்டியல் அழிந்து விடுகிறது. சிலவேளைகளில் புதியதொரு உலாவியை நிறுவும்போது இப்பட்டியலை பிரதிபண்ணவேண்டிய தேவை ஏற்படலாம். இப்படி பல தேவைகளுக்காக ஏற்படும் இவ்வேலையை செய்துகொள்வது எப்படி என பார்ப்போம்.
1. Format செய்யப்பட்ட ஒரு Floppy டிஸ்க் ஐ அதன் டிறைவிலிடவும். இன்ரர்நெட் எக்ஸ்புலோரரை இயக்கவும்
2. File மெனுவில் Import and Export என்பதை கிளிக்பண்ணவும். Wecome to import and expot என்னும் விசாட் பெட்டி திறக்கும். Next ஐ கிளிக்பண்ணி மீண்டும் Expot Favorites, மீண்டும் Next, இப்போது Favourites பட்டியல் தென்படும், அதில் Favorites என்பதை தேர்வு செய்யவும், மீண்டும் Next
3. இப்போது Destination dialog box தென்படும். அதில் Browse ஐ கிளிக்பண்ணி Floppy க்குரிய A; டிறைவ் என்பதை "Save in" பாரில் கொண்டுவந்து நிறுத்தவும். இப்போது Bookmark என்ற பெயர் "File Name" பாரில் காணப்படும், Save என்பதை கிளிக்பண்ணி மீண்டும் Finish ஐ கிளிக்பண்ணவும். வேலை முடிந்துவிட்டது.
சரி இப்போது புதிய கம்பியூட்டரில் அல்லது புதிய உலாவியில் எப்படி restore பண்ணுவதென்று பார்ப்போம்.
1. சேமிக்கப்பட்ட Floppy ஐ டிறைவிலிடுங்கள். File-->Import and Export--> Next--> Import Favorites என கிளிக்பண்ணவும்.
2. அடுத்து வரும் பெட்டியில் C:\MY Documents\Bookmark.htm என காணப்படும், அதனருகிலுள்ள Browse என்பதை கிளிக்பண்ணி Save in பாரில் A: டிறைவை கொண்டுவந்து நிறுத்தவும். கீழே Bookmark என காணப்படும், அதை தேர்ந்தெடுக்கவும், Save என்பதை கிளிக்பண்ணவும்
3. அடுத்துவரும் பெட்டியில் A:\Bookmark.htm என்பதை காண்பீர்கள். அதில் Next. Next, Finish என கிளிக்பண்ணவும். இப்போது பிரதிபண்ணல் முடிந்துவிட்டது.
இன்னொரு சுருக்கமான வழியுள்ளது. Windows Explorer\My Documents\Favorites என்ற போல்டரை திறந்து அதிலுள்ளவற்றை கொப்பி பண்ணி, புதிய கம்பியூட்டரில் அதே போல்டரை திறந்து Paste பண்ணிவிடுங்கள். செய்துபாருங்கள்