Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரசுக்கு விடுதலைப் புலிகளின் 2 வார கெடு ஏன்?:
#14
இக் கவிதை இங்கே தரப்படுகிறது,மேலுள்ள கேள்விக்கு விடை பகர்வதால்.

மாலிகா கவிதை





திசைவழி தவறா நடத்தலிற்தான்
சேரிடமடையும் விரைவிருக்கிறது.
பாலையும் சோலையும் இடைவரும் நாளில்
பாலையிற் தளர்ந்தும்
சோலையிற் கிளாந்தும் தடுமாறல்
பயணத்துக்காகாது
இலக்கின் தலைமேலுள்ள குறியில்
விழியகலக்கூடாது.
நடத்தல்
மீண்டும் நடத்தல்
தொடர்ந்தும் தொடர்ந்தும் நடத்தலெனும்
பிரயத்தனமே வெற்றிதரும்.
வெய்யிலடிக்கும்போது நட
மழைபொழியும் நாளில் நட
பனியும் புயலும் தின்னும்
இரவோ பகலோநட.
நடந்தபின் கொஞ்சம் ஓய்வெடு
நடக்கமுன் இளைப்பாறாதே.
நடை பயணத்துக்கு வேண்டியது
உடற்பலமல்ல
நம்பிக்கை பலம்.
வழிநெடுகிலும் பார்த்தபடி போ.
உனக்கு முந்திய யாத்திரியரின்
எலும்புக்கூடுகள் கிடைக்கும்
பயணவழிக் குறிப்புகள் கிட்டும்
முன்னோடிகளின் காற்தடங்கள் அகப்படும்
எல்லாவ்றறையும் கடந்துபோ
அவை வழிகாட்டும் உனக்கு.
இடையில் விழுந்தாலும் தகைமையுடைச் சாவுவரும்.
நாளைய பயணிக்கு
நீயும் திசைசொல்லியாய்க் கிடக்கும்
தவம் பலித்த ஒருவனாக
உன் தடமிருக்கும் மண்ணில்.
போதாதா உனக்கு
தொடர்ந்து நட.



- உருவாக்கம்: மாலிகா
http://www.erimalai.info/2005/april/poems/malika.htm
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 06-30-2005, 01:34 PM
[No subject] - by Mathan - 06-30-2005, 01:54 PM
[No subject] - by Nitharsan - 06-30-2005, 04:15 PM
[No subject] - by Mathan - 06-30-2005, 04:29 PM
[No subject] - by narathar - 06-30-2005, 06:19 PM
[No subject] - by Mathan - 06-30-2005, 06:42 PM
[No subject] - by MUGATHTHAR - 06-30-2005, 08:30 PM
[No subject] - by Nitharsan - 06-30-2005, 08:31 PM
[No subject] - by adithadi - 06-30-2005, 09:39 PM
[No subject] - by வெண்ணிலா - 07-01-2005, 06:54 AM
[No subject] - by kuruvikal - 07-01-2005, 07:40 AM
[No subject] - by stalin - 07-01-2005, 11:07 AM
[No subject] - by narathar - 07-02-2005, 09:55 AM
[No subject] - by kirubans - 07-02-2005, 11:24 AM
[No subject] - by narathar - 07-05-2005, 09:20 PM
[No subject] - by ஈழத்துளி - 07-06-2005, 09:23 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)