Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வித்தகக் கவிஞர்
#1
திரைப்படப் பாடல் ஆசிரியரும், கவிஞருமான பா. விஜய்க்கு, "வித்தகக் கவிஞர்' என்ற விருதை திமுக தலைவர் மு. கருணாநிதி வழங்கினார்.

பா. விஜய்யின் கவிதை நூல்களை சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டபோது இப் பட்டத்தை வழங்குவதாக அவர் அறிவித்தார்.

அவர் கூறியதாவது:

நடிகர் கமல்ஹாசனுக்கு கலைஞானி என்ற பட்டம் கொடுத்தேன். கவிஞர் வாலிக்கு காவியக் கவிஞர் என்ற பட்டமும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இசைஞானி பட்டமும், கவிஞர் வைரமுத்துவுக்கு கவிப் பேரரசு பட்டமும் அளித்தேன்.

பொள்ளாச்சியில் பொதுக் கூட்டத்தில் கண்ணதாசன் ஆற்றிய உரையைக் கேட்டு, அவர் இனி கவிஞர் கண்ணதாசன் என்று பட்டம் கொடுத்தேன்.

இதெல்லாம் இன்னும் நீடிக்கின்றன. அந்த வகையில் விஜய்க்கு வித்தகக் கவிஞர் என்ற பட்டத்தை அறிவிக்கிறேன்.

வித்தகம் என்ற சொல்லுக்கு ஞானம், கல்வி, செம்மை, திறன் என்றெல்லாம் பல பொருள்கள் உள்ளன. எல்லாமே சிறப்பைக் குறிப்பிடும் பொருள்கள். விஜய் எழுதிய 12 கவிதை நூல்களையும் படித்துப் பார்த்ததில் இந்தப் பட்டத்தைத் தருகிறேன்.

நான் கைராசிக்காரனா இல்லையா என்று தெரியாது. ஆனால், இப்படி பட்டம் வழங்குவதில் எனக்கு வாய் ராசி உண்டு என்றார் அவர்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
வித்தகக் கவிஞர் - by SUNDHAL - 07-01-2005, 09:34 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)