10-02-2003, 03:40 PM
பாலியல் சம்பந்தமான
கெளரவ பெண் கொலை

ஈராக்கின் குர்திஸ் இனத்தின் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டிருந்த அப்துல்லா யொன்னெஸ்
10 வருடங்களுக்கு முன்னர் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாமெனும் பயத்தினால் நாட்டை
விட்டு வெளியேறி லண்டணுக்கு வந்தார்.அவரது அரசியல் தங்சக் கோரிக்கை லண்டனில் ஏற்றுக் கொள்ளப் பட்டதால் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புதியதொரு வாழ்கையைத் தொடங்கினார்.
காலப் போக்கில் தனது குழந்தைகள் குர்திய நாட்டு இஸ்லாமிய கலாசாரத்தை விட்டு ஐரோப்பி கலாச்சாரத்தை பின்பற்றத் தொடங்கிதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவர் தமது குழந்தைகளை கண்டித்தது மட்டுமல்லாமல், அவர்களை ஈவிரக்கமின்றி தண்டித்தும் இருக்கிறார்.
திடீரென ஒரு நாள் எவரும் எதிர்பாராத விதத்தில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கொடுரமாக கொலை செய்யப்பட்டுக் காணப்பட்ட அப்துல்லாவின் மகளான 16 வயது கெசு யொன்னசை அல்கொய்தா தீவிரவாதிகள் வீட்டினுள் நுழைந்து தாக்கி தன் மகளை கொலை செய்து விட்டு
சென்று விட்டதாக அப்துல்லா போலீசிடம் புகார் கொடுத்தார்.
ஆனால் நீதிமன்றத்தில் புதியதொரு தகவல் ெவளிப்பட்டப்பட்டது.
அது
16 வயது கேசு இறப்பதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதமொன்று போலீசாரிடம் சிக்கி அது நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டதுதான்.
அக் கடிதம்:-

இனி வணக்கம் அப்பா, இதுவரை உங்களை கஸ்டப்படுத்தியதற்கு வருந்துகிறேன் அப்பா.
அப்பா நீங்கள் விரும்பி விதத்திலான மகளாக வளர என்னால் முடியாமல் போனதையிட்டு மிகு வருத்தமாக இருக்கிறது.
இருந்தாலும் அப்பாவுக்கு விருப்பமில்லாதவற்றையும் செய்ய வேண்டியிருக்கிறதே.
ஆனாலும் அப்பாவுக்கு வயசானாலும் உங்கள் கை-கால்களின் வலு இன்னும் இளமையாகவே இருக்கிறது. நான் உங்கள் கை- கால்களின் பலத்தை காட்டக் கிடைத்த ஒரு பொருளாகத்தான் என்னை நான் நினைக்க வேண்டியிருக்கிறது.
மிக அருமை. நான் எங்கே போகப் போகிறேன் என்பது கூட எனக்கு தெரியவில்லை.
அதனால் என்னைத் தேடாதீர்கள் அப்பா.
என்று
அக்கடித்தை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற கெசு முயற்ச்சி செய்தாலும் அது நிறைவேறவேயில்லை.
அவள் ஒரு ஐரோப்பிய கிறிஸ்தவ இளைஞனுடன் ஏற்பட்டிருந்த காதல் தொடர்பு காரணமாக அவளது தந்தையால் கத்தியால் குத்தப்பட்டும் கழுத்து வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டது குடும்ப கௌரவமும் கலாச்சாரமும் காப்பாற்ற பட வேண்டுமென்ற காரணத்தால்.
இக் கொலையை விசாரித்த நீதிமன்றம் கெசுவின் தந்தையான அப்துல்லாவுக்கு ஆயுள் தண்டணை விதித்து தீர்ப்பளித்தது.

தமது கௌரத்தை காப்பாற்ற நடத்தப்படும் கொலைகள் தொடர்பாக : குடும்ப கௌரவங்களை பாதுகாக்க நடத்தப்படும் வன்முறைகள் பெண்களின் பாலியல் பிரச்சனைகளை முன் வைத்தே ஆரம்பமாகிறது.
ஓரு பெண்ணிண் வாழ்கை முறை , அவளது உடைகள், அவள் வாழும் விதம் ஆகியவை குடும்ப கௌரவத்தை காப்பாற்ற கூடிய விதத்தில் அமைய வேண்டுமென்றே ஆண்வர்கவாதிகள் எண்ணுகிறார்கள்.
ஓரு பெண் தன் குடும்ப கௌரவம் -மதம் - கலாச்சாரம் மற்றும் கொள்கைகளை மீறினால் அவர்களது குடும்ப கௌரவத்தை இழிவு படுத்துவதாக எண்ணுகிறர்கள். இப்படியாக தினம் தோறும் உலகின் ஏதாவது ஒரு இடத்தில் 13 பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்கிறது பெண் உரிமைக்கான லண்டன் மனித நேய அமைப்பு.
ஆனால் இப்படியான குடும்ப கௌரவத்தை அவமதிப்பதான குற்றச்சாட்டுகள் ஆண் வர்க்கம் மேல் சுமத்தப்படுவதில்லை என்று அது மேலும் கூறுகிறது.
உலகத்தில் வாழும் இப்படியான அல்லலுக்கு தினந்தோறும் சிக்கிக் கொள்ளும் 5000 பேருக்கு இளைக்கப் படும் கொடுமைகளை தட்டிக் கேட்கவோ தண்டனை வாங்கிக் கொடுக்கவோ முடியாமலிருப்பது வருத்தத்துக்குரியது என்று கூறுகிறது இவ் அமைப்பு.
இப்படியான கொலைகள் எந்த சமயத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்று லண்டனின் தலைமை இஸ்லாமிய அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.
ஆனாலும் இவை கிழக்காசியாவிலும் அரபு நாடுகளிலும் மிகக் கடுமையாக இருக்கிறது.
பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் இவை இன்றும் நடை முறையில் இருக்கிறது. இருப்பினும் இவை இங்கே சட்டத்துக்கு புறம்பானதேயாகும். யோர்தானின் சில பகுதிகளிலும், சிரியாவிலும் இந்நிலையை நேரடியாகவே காண முடியும். இந் நாடுகளில் நீதிக்கு புறம்பானதாகவும் இல்லை ,ஏற்புடையதாகவும் இல்லை. இங்கே இவற்றை மாற்றவோ எதிர்க்கவோ ஆட்சியாளர்கள் யோசிப்பதோ கண்டு கொள்வதோ இல்லை.
கொலை செய்யப் பட்ட கெசுவை கொலை செய்த அவளது தந்தைக்கு வேறு சில குர்திஸ் இனத்தவர்களது உதவி கிடைத்திருப்பதான தகவல்கள் கிடைத்ததையடுத்து லண்டன் போலீசார் தொடர் துப்புத் துலக்கலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஆசியாவில் மட்டுமல்ல ஐரோப்பி நாடுகளிலும் இப்படியான பெண் வதைகளும் கொலைகளும் இடம் பெறுவதாகக் கூறும் லண்டன் நகர போலீசின் தலைமை அதிகாரியான அன்டி பேக்கர் கடந்த வருடத்தில் மாத்திரம் இப்படியாக லண்டனில் மட்டும் 12 பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்.
[size=14]இது குடும்ப கௌரவ - கலாச்சார கொலைகள் என்பதை விட மனித நேயமற்ற பாலியல் மிருக வதைக் கொலைகள் என்று தனது விசனத்தையும் தெரிவித்திருக்கிறார்.
அடுத்த வாரம் லண்டன்-சுவிஸ் பெண்கள் அமைப்பு தரும் இலங்கை பெண்கள் தொடர்பான கொலைகள் பற்றிய குறிப்புகள் வெளியிடப்பட இருககிறது.