06-30-2005, 08:31 PM
மதன் உங்கள் கவலை புரிகிறது போர் வேண்டும் போர் தான் முடிவு என்று வெற்று வோட்டை நாம் முன் வைக்கமுடியாது அது சரியுமல்ல. ஏனெனில் போரினால் பாதிக்கப்படபோவது நமும் இல்ல போரடப்போவதம் நாமல்ல. இங்கிரக்கும் சிலர் தமது பணங்கள் அங்கே ஆயுதம் ஏந்துவதாய் நினைத்துக் கொண்டு அங்கிருக்கும் மக்கள் நிலை பற்றி அறியாமல் கதைக்கின்றனர். எனது கருத்து என்ன என்றால், போர் என்பது தமிழர் விரும்பி ஏற்றதல்ல நெஞ்சில் தீயை வைத்துக் கொண்டு எத்தனை நாளைக்கு எங்கள் மக்கள் இருக்க முடியும்? இன்றும் அதே சுூழ்நிலைதான் தமிழர்கள் போரை ஆரம்பி மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் ஆனால் சிங்கள தேசம் போரை திணித்தால் போரை தவிர வேறு வழி தமிழர்களுக்கு இல்லை. இதை விட இதுவரை அனுபவித்த போரின் கோரங்களை விட இனி என்னத்தை எம்மக்கள் அனுபவிக்கபோகிறார்கள்? செல்லடிக்கும் இப்போ புலிகளிடம் பதில் இருக்கு விமானத்தாக்குதலை எதிர் கொள்ளும் பலமும் அவர்களிடம் இருக்கிறது.. இப்படியோரு போர் மூண்டால் பொருளாதார தடையை அரசு விதிக்கலாமே! தவிர மற்ற எந்த விதத்திலும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் மக்களை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் மற்றை வடகிழக்கு பிரதேச மக்கள் பாடு.... அதே பழைய பாஸ் முறை அதே விசாரனை.. அதே கைதுகள் இடம் பெறும் என்பதில் ஐயமில்லை..
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

