06-30-2005, 04:20 PM
எங்களை புலத்தில் கவர்ந்தது இந்த புலத்துப் பூர்வீக முதியவர்கள் தான்... ஆடம்பரமில்லா எளிய வாழ்க்கை...அமைதியான சூழலில் அன்பான சோடிகளா நிம்மதியாக வாழ்கிறார்கள்... பிள்ளைகள் பிரிந்து போக எண்ணினால் தடுக்காது...அவர்களின் சிந்தனைக்கு மதிப்பளித்து வாழ அனுமதிக்கிறார்கள்... ஒரு பூனையையோ நாயையோ பிள்ளைகளாக நினைத்து வளர்க்கிறார்கள்...அவற்றின் மீது அன்பும் பரிவும் காட்டுகிறார்கள்... அதுபோல் மற்றவர்கள் மீதும் அன்பாக நட்புறவோடு பழகிறார்கள்..என்ன அவர்களை அச்சுறுத்தவும் ஏமாற்றமும் என்றே ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்து...அதுவும் குறிப்பாக ரீன் ஏச் கூட்டம்...இந்த முதியவர்களின் முதல் எதிரிகள் எவை தெரியுமா...சிறுவர் கையில் உலாவும் கையடகத் தொலைபேசிகள்...! முதுமை என்பது வாழ்வின் ஒரு கட்டம்...அது கழிக்கப்பட்ட கைவிடப்பட்ட நிலையல்ல....! அவர்களுக்கும் இளையவர்களுக்கு அவர்கள் வயதில் வரும் ஆசைகள் போல...ஆசைகள் இருக்கு...அதை இளையவர்களும் மற்றோரும் புரிந்து நடந்து அவர்களின் அந்த வயதுக்குரிய வாழ்வை...மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்...!
0 - 5 வயது குழந்தைப் பருவமாக கழிய... 5 -15 வயது அறியாமையில் கழியும்... 15 - 18 கல்வியில் கழியும் 18 - 55 வரை இளமை என்று ஏதோ சொல்லி வாழ்க்கை ஓடும்... 55 - 80 வரை...சும்மா இல்ல 25 வருடங்கள் முதுமைக்குள்...தள்ளப்பட்டு சீரழிக்கப்பட்ட...அல்லது கழித்துவிடப்பட...அவ்வயதினர் அதற்குள் சந்திக்கும் மன உளளச்சல்கள் சொல்லில் வரைய முடியாதவை...இதை 20 திலோ 30 திலோ இருப்பவர்கள் சிந்திப்பதில்லை... அவர்களுக்கு அப்ப சிந்தனை தாங்கள் சிரஸ்சீவி இளமை படைத்தவர்கள் என்பதாகவே இருக்கும்...இந்த நிலையை எமது சமூகத்தில் தெளிவாகக் காணலாம்...எனியும் அதை புலத்திலோ...தாயகத்திலோ... அனுமதிக்கக் கூடாது...!
இப்படி முதியவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக.. பாரபட்சமாக...கழித்துவிட்ட மனிதர்களாக நோக்குவது எமது தமிழ் சமூகத்தில் நிலவும் மிகக் கேவலமான ஒரு பார்வை (அதிக சந்தர்ப்பங்களில்)...என்றே சொல்வோம்...! மேற்குலக அரசுகளை இது விடயத்தில்.. மிகவும் பாராட்ட வேண்டும்...முதியவர்களின் உணர்வுகளுக்கும் வாழ்வுக்கும் மதிப்பளிப்பவர்களாக அவர்கள் பெரிதும் செயற்படுகிறார்கள்...! எங்கள் இளையவர்களில் அந்தச் சிந்தனை இப்போ மிகவும் அருகி வருகிறது...அவர்களின் சிந்தனை தாங்கள்...ஏதோ புதிய பிறவிகள் என்பது போன்ற மாயத் தோற்றம் வளர்ப்பதாகவே இருக்கிறது...முதியவர்களுடனா தொடர்பாடல் உறவு நிலை விரும்பாதவர்களாகவே அநேகர் இருக்கின்றனர்...பெற்றோரும் அதை ஊக்கிவிக்கின்றனர்...காரணம் தான் புரியவில்லை...!
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் பாவனையும் என்பது மனிதனின் சில நடவடிக்கைகளை மாற்றலாம்..ஆனால் வாழ்வியலின் அடிப்படைகளான அன்பு பந்தம் பாசம் காதல் அரவணைப்பு பரிவு உறவு கருணை மற்றும் இவற்றின் மூலமான நித்திய மன அமைதி...ஆகியவற்றை வழக்க முடியாது அல்லது அதன் தேவைகளை இல்லாமல் செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது...இந்த அடிப்படையை...இளையவர்கள் இப்போதே புரிந்து கொள்ள வேண்டும்..அதுவும் சுய தேடல் மூலம்...! மற்றவர்களை எதிர்பார்த்திராமல்... தாங்களே வலிந்து முதியவர்களை இனங்கண்டு உறவாட வேண்டும்...அவர்களை தனிமைப்படுவதை அனுமதிக்கக் கூடாது....அப்படியான ஒரு பாசப் பிணைப்பை பெர்றோரும் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும்...! மனிதர் நாம் சமூக வாழ்வியல் நடத்தையைக் காண்பிப்பவர்கள்...எனவே எவரையும் தனித்து விட அனுமதிக்கக் கூடாது...!
இந்த இடத்தில் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்... இது சுய புகழ்ச்சியல்ல... எங்கள் இயல்பு... நாங்கள் சிறியவர்களாக இருக்கும் போதே எங்களுக்குள் ஒரு ஆதங்கள்... ஏன் இந்த முதியவர்களைப் கழித்து விட்ட பிறவிகளாக வேற்று மனிதர்களாக எமது சமூகம் பார்க்கிறது என்று..அதனால் பல சந்தர்ப்பங்களில்...முதியவர்களையே நாடிச் சென்று...உரையாடுவது உண்டு..அப்போ அவர்களின் உணர்வுகளை ஏக்கங்களை உள்வாங்கக் கூடிய நிலை இருந்தது....இப்பவும் செய்வதுண்டு....அதனால் குருவிகளுக்கு முதியவர்கள் தான் அதிகம் நண்பர்களாக இருக்கிறார்கள் என்று கேலியும் செய்வார்கள்..நாங்கள் அதைப் பொருட்படுத்துவதே இல்லை...! முதியவர்களுடன் உரையாடுதல் என்பது எங்களுக்கு ஒரு ஆறுதலையும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்து வாழ்வது போன்ற ஒரு பாச உணர்வையும் தருகின்றது..அவர்களின் உணர்வுகளை அனுப பாடங்களை கற்க வேண்டும் என்ற ஆதங்கமும்...அவர்களை நாடிப் போக ஒரு காரணம்.....! இதை ஏன் இன்றைய சிறுவர்கள் சிந்திக்க மறுக்கின்றனர்...???! அதற்கு பெற்றோர் சொல்லும் "ஜென்ரேசன் கப்" என்ற தப்பான அர்த்தம் கொள்ளுதலும்...காரணமாகலாம்... அப்படி கப் இருந்தால் எப்படி பல்கலைக்கழகங்களுக்குச் சென்று முதிய பேராசிரியர்களிடm உங்களுக்கான நவீன கல்வியைப் பெறுகின்றீர்கள்..எப்படி அவர்கள் ஆராய்ச்சிகளுக்காக உங்களை வழி நடத்துகின்றனர்...! அதே அனுபவத்தை எங்கள் வீட்டுச் சூழலில் வாழும் பெற்றோரும் பெற்றே இருப்பர்..பெற முடியும்..அதற்காக வழிகாட்டுதலை வழங்குங்கள்...அதன் பின் இந்த ஜெனரேசன் கப் என்பது அவசியமற்றதாகும்...! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>