Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழுத்தும் வெய்யிலில் வேலை வாங்க கூடாது
#1
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் களப்பணியாளர்களை வேலை வாங்கக்கூடாது என்று ஐக்கிய அரபு அமீரக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அமீரகத்தில் கோடைகாலம். 113 டிகிரி வெயில் கொளுத்தும். அப்போது தொழில் நிறுவனங்கள் தங்களது களப்பணியாளர்களை மதியம் 12- 30 முதல் மாலை 4-30 மணிவரை வேலை செய்யச் சொல்லக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலாளர் நலம் மற்றும் சமூக விவகாரத்துறை அமைச்சர் அலி பின் அப்துல்லா அல் ஹாபி இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதில் மேலும் கூறியிருப்பதாவது:

தொழில் நிறுவனங்களில் காலை ஷிப்ட் ஐந்து மணி நேரம் மட்டுமே இருக்க வேண்டும். பகல் 12-30க்கு மேல் பணி நேரத்தை நீட்டிக்கக்கூடாது. அதுபோல் அடுத்த ஷிப்ட் மாலை 4-30 மணிக்கு முன்பாக தொடங்கக் கூடாது.

அரபு அமீரகத்தில் களப்பணியாளர்களாகப் பணியாற்றுபவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் இந்தியர்கள். இந்த தொழிலாளர்களைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பகல் முழுவதும் (சுட்டெரிக்கும் வெயிலில்) கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாகப் புகார் வந்துள்ளது. இது போன்ற மனிதநேயமற்ற செயல்களை எங்கள் அரசாங்கம் அனுமதிக்காது.

மேலும் தொழிலாளர்களின் வேலை நேரம் எட்டு மணி நேரம். அதற்கு மேலும் அவர்கள் பணி செய்ய நேரிட்டால் அதை அதிக நேரப்பணியாக (ஓவர் டைம்) கணக்கிடப்படவேண்டும். அதற்குத் தனியாக ஊதியமும் வழங்க வேண்டும். இச்சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
கொழுத்தும் வெய்யிலில் வேலை வாங்க கூடாது - by SUNDHAL - 06-30-2005, 01:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)