06-30-2005, 10:53 AM
Niththila Wrote:சண்டை பிடிக்காதீங்க
நடிகை எண்டாலும் அது அவையின்ர தனிப்பட்ட வாழ்க்கை தானே
அதை சமூகம் தனக்கு உதாரணம் ஆக்குதே...மேற்கிலும் கூட "Celebrities" இன் செல்வாக்கு என்பது சமூகத்தில் இன்னும் தாக்கம் செலுத்த வல்ல ஒன்றாகவே இருக்கிறது...! உதாரணத்துக்கு எல்லோருக்கும் தெரிந்த டயனாவை.. பல விடயங்களில் உதாரணத்துக்குக் காட்ட மேற்கிலும் ஆக்கள் இருக்கிறார்கள்...அவருடைய தனிப்பட்டை வாழ்வை ஆராய்ந்து அவர்கள் அதைச் செய்யவில்லை...மேலோட்டமாக அவரை நோக்கி உதாரணம் காட்டி தங்கள் நடவடிக்கைகளை செய்கிறார்கள்..!
அதேபோல்.. தென்னிந்தியாவில் இலங்கையில் மலேசியாவில் சிங்கப்பூரில் தொலைக்காட்சி நிகழ்சிக்களை எடுத்தால் சமையல் குறிப்பு அழகுக் குறிப்பு குடும்ப வாழ்வியல் இப்படி அதிகமான விடயங்களுக்கு அட்வைஸர்களாக நடிகர் நடிகைகளைத்தான் போடுவார்கள்...சிறிய வயதில் இருந்தே அதைப் பார்த்து வருபவர்களுக்கு...தாங்கள் பார்க்கும் நடிகை நடிகர்களின் தனிப்பட்ட வாழ்வியல் பின்னணிகளை அறிய வேண்டிய அவசியம் அறியாமல்...அவர்களை உதாரணமாக்கிக் கொள்வதையே தவறென்று சொல்ல முடியாது...எங்களுக்குள் கூட இப்படியான பாதிப்புக்கள் இருந்திருக்கிறன... நாங்க ரீவில பார்த்து... நல்லவர்கள் என்று பல காலம் எண்ணியவர்கள்...பிறகு தனிப்பட அநாகரிகமானவர்கள் என்று அறிந்த போது...சில தாக்கங்கள் இருக்கவே செய்தன.... அப்படி எல்லோருக்குள்ளும் எழும்... சாதாரண மக்களுக்கு இது ஒரு உதாரணமாக..அவர்களின் சொந்த வாழ்வியலைப் பாதிக்கக் கூடிய வகையில் சென்றடையலாம்.. விஜய் சிகரட் குடிக்கிறார் என்று தன் காதலனுக்கு சிரகட் வாங்கிக் கொடுக்கும் காதலிகள் இல்லை எங்கிறீர்களா...இலங்கையிலையே கண்ணால கண்டம்.. அதுவும் பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள்...! அவர்களே அப்படிப் பாதிப்புக்களை சந்திக்கும் போது சாதாரண மக்களை இப்படியான செய்திகள் பாதிக்காது என்று எப்படி எண்ணுவது...! இதைச் சொல்வதே எங்கள் நோக்கம்...!
தமிழினி சண்டை எல்லாம் பிடிக்கல்ல...அவர் சொல்லுறார் நீங்கள் ஏன் இதைப்போடுறீங்கள் என்று... எங்களது கேள்வியும் அதுதான்..இப்படியான தனிப்பட்ட வாழ்வியல் பிறழ்வுகளுக்கு ஏன் விளம்பரம் என்று...! வந்த விளம்பரத்தை எனி மூடி மறைக்க ஏலாது...அதை வைச்சு அது தப்பான விளம்பரம் என்பதுதான் அவசியம்...சமூகத்தில் விழிப்புணர்வுக்கு....! சரியா தங்கையே...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

