10-02-2003, 12:50 AM
Quote:அன்பு, காதல், காமம், பாசம்,நேசம்,அனுதாபம்,நட்பு,கவர்ச்சி,............இப்படியான ஒருவரை ஒருவர் ஈர்க்கும் சக்தியுடன் கூடியதைத்தான் செக்ஸ் என்கிறோம். நமது நடைமுறை பழக்கத்தின் வித்தியாசங்கள்தான் வேறு வேறே தவிர அடிப்படை ஒன்றுதான்.
Sex - All of the feelings resulting from the urge to gratify sexual impulses
அண்ணை
காமத்தை ஒரு கலையாகப் போற்றிப் புகழ்ந்தது எமது கலாசாரம்...ஒருவனுக்கு ஒருத்தி எனும் பண்பாட்டில்..தலைவனும் தலைவியும் ஒன்றறக்கலந்து காதலில் ஈருடல் ஓருடலாகக்கலக்கும் நிகழ்வு...
கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு சமுதாய அமைப்பை நெறிப்படுத்தவும் நோய் நொடியிலிருந்து பாதுகாக்கவுமே திருமணத்தையும் ஒருவனுக்கு ஒருத்தி...ஒருத்திக்கு ஒருவன் எனும் கற்பின் அடிப்படையிலான கலாசார அமைப்பைக் கொண்டது எமது இனம்...திருமணத்தின் பின் தத்தமது துணையுடன் அந்தக் கலையை நன்றே பயின்று நன்கே அனுபவிக்கலாம்....
திருமணத்திற்கு முன் எதற்கையா அலையவேண்டும்?....மாணவ (பிரம்மச்சாரிய) பருவத்தில் மனதை அடக்கி ஐம்புலன்களை ஒடுக்கி கல்வி கடமைகளில் மனதைச் செலுத்தவேண்டும்
சோறு அவிந்தபின்தான் சாப்பிடலாம்..அதுவரை பொறுமை வேண்டும்...அவிய முதல் பானையினுள் கையைவிட்டுச் சாப்பிட்டால் கையையும் சுட்டுக்கொள்வீர்கள் வாயையும் புண்ணாக்கிக் கொள்வீர்கள்...எல்லாத்துக்கும் ஒரு பருவம் பக்குவம் உண்டு!

