06-28-2005, 05:57 PM
வங்காள தேசத்தில் 7 வயது சிறுவனுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதாக புகார் செய்தான். அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவன் வயிற்றுப் பகுதியில் பாதி வளர்ந்த நிலையில் கரு இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அவனது தாயார் முன்பு கருவுற்றபோது இரட்டை குழந்தை களுக்கான 2 கரு உருவாகி அவற்றில் ஒன்று மற்றெhரு கருவுக்குள் நுழைந்தது. முதல் கருதான் இப்போதைய சிறுவன். ஆனால் அவனுள் நுழைந்த கருவும் வளர்ந்து கொண்டே இருந்தது. தலை தவிர மற்ற உறுப்புகள் அந்த கருவில் வளர்ந்து வந்தன. 2 கிலோ எடை வரை வளர்ந்த அந்த கரு இப்போது அறுவை சிகிச்சை மூலம் சிறுவனின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது. அதைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் சிறுவனுக்கு குழந்தை பிறந்துள்ளது என பரவிய வதந்தி கேட்டு மருத்துவமனையில் குவிந்தனர்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

