Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆந்திர ஜெயலலிதா ஆக ஆசையா?
#1
ஆந்திர ஜெயலலிதா ஆக ஆசையா?



அரசியலில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் விஜயசாந்தி!

அதிரடி ஆக்ஷன் ஹீரோயின்,தல்லி தெலுங்கானா என தனி ஆவர்த்தனம் பண்ணக் கிளம்ப... ஆந்திரத்தின் அத்தனை அரசியல்வாதிகளும் அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.


ஹைதராபாத்தின் புறநகரான உப்பல் குறுக்குச் சாலையில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அத்தனை உயரத்தில் நின்றபடி ஜெய் தெலுங்கானா! என கோஷம் போட ஏரியாவே அலறுகிறது... ஜெய் ஜெய் தெலுங்கானா!

ஆமாம், தெலுங்கானா எனத் தனி மாநிலம் கேட்கிறார் விஜயசாந்தி!


கட்கேசர் என்ற ஊரில், விஜயசாந்தியைப் பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம். என் உயிர் போனாலும் தனித் தெலுங்கானா கொள்கையைத் தாங்கிப் பிடிப்பேன். உங்களின் துணையோடு தனி மாநிலத்தை அமைத்தே தீருவேன்! என்கிறார் ஆவேசமான குரலில். கூட்டத்தில் விசில் பறக்கிறது. ஏழெட்டு டஜன் கார்கள் பின்தொடர, பயணம் தொடர்கிறது. ரொம்பவே உணர்ச்சிப் பிழம்பாக இருந்த விஜயசாந்தியிடம் பேசுகிறோம்...
தெலுங்கானா என்பது ஆந்திராவின் சுதந்திரப் போராட்டம்! தனி மாநிலம் கேட்கிறோம் எனபதை ஏதோ பிரிவினைப் பிரச்னை என்று பார்க்காதீர்கள். இது இந்த மண்ணின் ஜீவாதாரப் பிரச்னை. சினிமாவில் பிஸியாக இருந்த சமயத்திலேயே, தனித் தெலுங்கானாவுக்காகப் போராடுவது என்று முடிவெடுத்தேன். ஆனால், ஒரு சாதாரண நடிகையால் அவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்த முடியுமா? எனவே, முதல் கட்டமாக என் ரசிகர்கள் படையை யுவசேனா என்ற பெயரில் ஆரம்பித்தேன். பிறகு, பி.ஜே.பி&யில் சேர்ந்தேன். பெரிய பதவிகளைக் கொடுத்தார்கள். ஆனால், என் கனவான தனித் தெலுங்கானாவை மட்டும் கண்டுகொள்ளவில்லை. இனியும் காலம் தாழ்த்துவது நான் பிறந்த தெலுங்கானாவுக்குச் செய்யும் துரோகம் என்று முடிவு செய்து, இதோ புறப்பட்டுவிட்டேன், தல்லி தெலுங்கானா என்ற அமைப்பின் தலைவி யாக! என்கிறார் எமோஷனலாக.


ÔÔசென்னையில் பிறந்த நீங்கள் எப்படித் தனித் தெலுங்கானாவுக்காக ஆந்திரத்தில் போராட முடியும்?ÕÕ

நான் தெலுங்கானா மகள்தான். நான் பிறந்தது சென்னையாக இருக்க லாம். ஆனால், என் அம்மா வரலட்சுமி பிறந்தது ராமண்ணகூடத்தில்தான். என் தாத்தா சேஷாவதாரம், பாட்டி மானஸாபாய் இருவரும் அந்தக் காலத்தில் ராமண்ணகூடத்தில் தனி ராஜாங்கமே நடத்தியிருக்கிறார்கள்.

பயத்தில் தவிக்கிற சந்திரபாபு நாயுடுதான் இந்த மாதிரியான கேள்விகளை எல்லாம் எழுப்பிக் கொண்டு இருக்கிறார். அவர்தான் என் முதல் எதிரி. ஏனென்றால் அவர் எங்கள் தெலுங்கானாவின் எதிரி. கடந்த முறை அவர் பி.ஜே.பி|யோடு கூட்டு வைத்திருந்தபோது, தனித் தெலுங்கானா கிடைக்காமல் இருப்பதற்கு வேண்டிய அத்தனை காரியங்களையும் செய்தார். பத்து மாவட்டங்களை உள்ளடக்கிய தெலுங்கானா பகுதியில் எண்பது சதவிகிதம் பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள். தெருவைச் சுத்தம் செய்வது, ஓட்டல்களில் மேஜை, நாற்காலிகளைத் துடைப்பது, எடுபிடி களாக, கூலிகளாக என்று அடிமைகளாக வாழ்கிறார்கள். தெலுங்கானாவின் மூன்றே கால் கோடி மக்களின் சமூக, பொருளாதார விடுதலைக்காகவும், அவர்களுக்கு சமூக நீதி கிடைக்கவுமே இப்போது நான் களத்தில் இறங்கி உள்ளேன். இதில் என் உயிர் போனாலும் கவலையில்லை. என் லட்சியத்தை அடையாமல் ஓய மாட்டேன் என்கிறார் ஆவேசம் கொப்பளிக்க!


அடுத்து, தெலுங்கானா பகுதியின் முக்கிய நகரமான வாரங்கல் நோக்கி விரைகிறது கார்.

ÔÔஉதாரண முதல்வர் என்று பாராட்டப்பட்டவர் சந்திரபாபு நாயுடு. ஆனால், அவர்தான் உங்கள் முதல் எதிரி என்கிறீர்கள். அவரது ப்ளஸ், மைனஸ் என்ன?ÕÕ

அரசுப் பணத்தில் சுய விளம்பரம் தேடிக்கொள்வது எப்படி என்பதற்கு அவரிடம் ஐடியா கேட்கலாம். பொய்களைக்கூட மக்களிடம் கூசாமல் நிஜம்போல் பேசும் மன தைரியம்தான் அவரது ப்ளஸ் பாயின்ட். ஹைதராபாத் தவிர, ஆந்திராவின் எந்தப் பகுதியையும் கண்டுகொள்ளாமல் கம்ப்யூட்டரே கதி என்று ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயராக அரசுப் பணத்தில் ஊரை வலம் வந்தவர் அவர்!


|விஜயசாந்தி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே போலீஸ் அதிகாரிகள் குறுக்கிட்டு, ‘‘இனி, நீங்கள் போகப் போகும் பாதை எல்லாம் நக்ஸலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி. துப்பாக்கி தாங்கிய எங்கள் வீரர்கள் உங்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பார்கள். உங்கள் ஒத்துழைப்புதான் எங்களுக்கு முக்கியம்’’ என்கிறார்கள்.

ÔÔஆந்திராவில் நக்ஸலைட்டுகளை அடக்கவே முடியாதா?ÕÕ என்கிற நம்மைப் பார்த்து பளிச்செனச் சிரிக்கிறார் விஜயசாந்தி.

‘‘நக்ஸலைட்டுகளை தேசத் துரோகிகள் என்று சொல்லி, என்கௌன்ட்டர்கள் மூலம் பல அப்பாவிகளைக் கொன்று குவிக்கிறது காங்கிரஸ் அரசு. பேச்சுவார்த்தை என்று நக்ஸலைட்டுகளை ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அழைத்து விட்டு, இப்போது ‘ஆயுதங்களைக் கீழே போட்டால்தான் பேச்சு வார்த்தை’ என்று முரண்டு பிடிக்கிறார். உண்மையில், பிரச்னை ஆயுதங்கள் அல்ல. பேச்சு வார்த்தை நடத்த மனம் இல்லாததுதான்!

தெலுங்கானாவில் பரவியிருக்கும் நக்ஸலைட்டுகளின் கோரிக்கைகள் என்ன என்பதைச் செவி கொடுத்துக் கேட்பதுதான் அரசின் கடமை. இதை இந்த அரசு செய்யவில்லை. தினம் தினம் தெலுங்கானாவில் வேலை இன்மை, பசி, பட்டினியால் ஒவ்வொருவரும் நக்ஸல்பாதைக்குத் திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள். பொதுமக்களின் ஆதரவும் அவர்களுக்கு இருக்கிறது. இது சமூக, பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னை. போலீஸை வைத்துக்கொண்டு துப்பாக்கிகள் மூலம் நக்ஸல் பிரச்னையை ஆந்திர அரசு கையாள்கிறது. இதற்குப் பலன் கிடைக்கப் போவதில்லை!’’ என்று விஜயசாந்தி சொல்லி முடிக்க, முலுகு என்ற ஊர் வந்திருந்தது.

ÔÔமக்கள் போராட்டம் மூலம் தனித் தெலுங்கானா என்பது உங்கள் கோஷமாக இருக்கிறது. அப்படியானால், தற்போதைய மத்திய அரசில் மிக முக்கியக் கட்சியாக இருக்கும் தி.மு.க|வின் தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உங்கள் கோரிக்கையைச் சொல்வீர்களா?ÕÕ

‘‘தனித் தெலுங்கானா வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஏற்கெனவே சந்திரசேகர ராவ் ‘தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி’ என்கிற கட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறார். தனித் தெலுங்கானா வேண்டும் என்பதை வலியுறுத்தும் மனு ஒன்றைக் கருணாநிதியிடம் கொடுத்து, அதற்காக ஆதரவு தரும்படி கேட்டார். ஆனால், கருணாநிதி அதைக் கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில் நான் கருணாநிதியைச் சந்திப்பதில் எந்தப் பிரயோஜனமும் இருக்காது!’’

நாலாபக்கமும் மலைகள் சூழ அத்துவானக் காட்டில் அமைந்திருந்த ஒரு கோயிலில், சாமக்கா என்கிற கிராம தேவதை வீற்றிருக்கிறாள். தெலுங்கானா மக்களுக்கு இஷ்ட தெய்வம் சாமக்கா. ஒரு மணி நேரம் இந்தக் கோயிலில் பிரார்த்தித்த பின்பு, ஊர்வலம் ராமண்ணகூடம் நோக்கிப் புறப்படுகிறது.

ÔÔஆக, ஆந்திரத்து ஜெயலலிதா ஆவதுதான் ஆசையா?ÕÕ என விஜய சாந்தியிடம் கடைசிக் கேள்வியை வீசுகிறோம்.

‘‘எனது அரசியல் ஆசான் அம்மாதான்! அவர் உலக அளவில் அரசியல் செய்யும் தகுதி உடையவர். இந்தியப் பிரதமராகும் எல்லாத் தகுதிகளும் அவருக்கு உண்டு. அவ்வளவு பெரிய தலைவியுடன் என்னை ஒப்பிடுவதே தவறு. அவர் வழியில் என் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறேன். அவர் தான் எனக்கு வழிகாட்டி. வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில், ஜெயலலிதா தனிப்பெரும் தலைவி யாக உருவெடுப்பார். அப்போது, ஜெயலலிதாவின் தயவு இல்லாமல் யாரும் டெல்லியில் ஆட்சி அமைக்க முடியாது. அந்தச் சமயத்தில், அவரைச் சந்தித்து எங்கள் தெலுங்கானா கோரிக்கையை முன்வைப்பேன். அவர் எங்களுக்குக் கண்டிப்பாக உதவுவார்!’’ என்பவர், சற்றுப் பின்னால் திரும்பி,

‘‘அதோ பாருங்கள்... அங்கு ஒரு மலை தெரிகிறதல்லவா? அந்த மலைமீது ஏறிப் பார்த்தாலே, சத்தீஸ்கர் நன்றாகத் தெரியும். எங்களுக்குப் பக்கத்திலேயே புதிதாக ஒரு மாநிலம் உதயமாகியிருக்கிறது.

ஆனால், நேரு காலத்தில் தெலுங்கானாவும் ஆந்திராவும் தனித்தனியாகத்தான் இருந்தன. ‘ரெண்டு மாநில மக்களும் ஒரே மொழி பேசுகிறீர்கள். ரெண்டு பேரும் கணவன்|மனைவியாகச் சேர்ந்து இருங்கள். பிரச்னை ஏதாவது இருந்தால், விவாகரத்து கொடுத்துப் பிரித்துவிடுவோம்’ என்று இரு மாநில இணைப்பின்போது குறிப்பிட்டாராம் நேரு. அவர் சொன்னதைப் போல விவாகரத்துக்கான நேரம் வந்து விட்டது. கணவன்|மனைவியைப் பிரிப்பதுதான் அவரவர் எதிர் காலத்துக்கு நல்லது! என்கிறார் விஜயசாந்தி அழுத்தமான குரலில்.

அப்படியே இன்னொரு ஜெயலலிதா!







நன்றி - விகடன்
[b][size=15]
..


Reply


Messages In This Thread
ஆந்திர ஜெயலலிதா ஆக ஆசையா? - by தூயா - 06-27-2005, 12:30 PM
[No subject] - by Nitharsan - 06-27-2005, 07:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)