06-27-2005, 09:33 AM
<img src='http://img246.echo.cx/img246/1973/birdflower10mu.jpg' border='0' alt='user posted image'>
<b>சிட்டாய்ப் பறந்தவன்
சிறை சென்றேன்
சித்திரவதையும் படுகின்றேன்
சில நேரம்
சிந்துகிறேன் விழி நீர் - இருந்தும்
சினமேதும் கொண்டதில்லை
சின்னவள் கோபம்
சிந்திக்க வைப்பதால்..!
சின்ன மலரவள்
சிந்திய வார்தைகள் சில
சிந்தை கலக்கும் இடியாய்
சிட்டு இவன் சிரசில் விழ
சிதைந்தே போகிறான்..!
சின்னவன் சிரசு
சிலையுமல்ல பகை முகிலுமல்ல
சினக்க முதல் சிந்திப்பாயா மலரே..?!
சின்னச் சிறகடித்து
சிறப்பான உன் அன்பை நாடி
சிங்காரம் உன் மடி சரணடைந்தேன்
சின்னச் சில்மிசம்
சினங்கொள்ளச் செய்ததோ...
சிந்துகிறாய் சொல்லடி
சிதைகிறேன் என் உயிர் நாடி
சிறகொடிந்து வீழ்கிறேன் அநாதையாய்
சிந்திப்பாயா என் அன்பு மலரே...?!
சிறப்பான நம் வாழ்வுக்காய்
சிறந்த அன்பு கொண்டு
சிந்தித்தே வந்தேன் உன் வழி
சிந்தியாமல் துரத்தாதே தூர
சிதையாதே என் உயிர் நாடி
சின்னப் பறவையிவன் வாழ்வழித்த
சிறப்புத் தகமை வேண்டுமா உனக்கு
சிறப்பாய் நீ வாழ...?!
சிறப்பு அதுவென்றால்
சீக்கிரமாய் பெற்றுக்கொள்...வாழ்ந்துகொள்...!
சிறப்புற வாழ வாழ்த்துக்கள்..!</b>
<b>சிட்டாய்ப் பறந்தவன்
சிறை சென்றேன்
சித்திரவதையும் படுகின்றேன்
சில நேரம்
சிந்துகிறேன் விழி நீர் - இருந்தும்
சினமேதும் கொண்டதில்லை
சின்னவள் கோபம்
சிந்திக்க வைப்பதால்..!
சின்ன மலரவள்
சிந்திய வார்தைகள் சில
சிந்தை கலக்கும் இடியாய்
சிட்டு இவன் சிரசில் விழ
சிதைந்தே போகிறான்..!
சின்னவன் சிரசு
சிலையுமல்ல பகை முகிலுமல்ல
சினக்க முதல் சிந்திப்பாயா மலரே..?!
சின்னச் சிறகடித்து
சிறப்பான உன் அன்பை நாடி
சிங்காரம் உன் மடி சரணடைந்தேன்
சின்னச் சில்மிசம்
சினங்கொள்ளச் செய்ததோ...
சிந்துகிறாய் சொல்லடி
சிதைகிறேன் என் உயிர் நாடி
சிறகொடிந்து வீழ்கிறேன் அநாதையாய்
சிந்திப்பாயா என் அன்பு மலரே...?!
சிறப்பான நம் வாழ்வுக்காய்
சிறந்த அன்பு கொண்டு
சிந்தித்தே வந்தேன் உன் வழி
சிந்தியாமல் துரத்தாதே தூர
சிதையாதே என் உயிர் நாடி
சின்னப் பறவையிவன் வாழ்வழித்த
சிறப்புத் தகமை வேண்டுமா உனக்கு
சிறப்பாய் நீ வாழ...?!
சிறப்பு அதுவென்றால்
சீக்கிரமாய் பெற்றுக்கொள்...வாழ்ந்துகொள்...!
சிறப்புற வாழ வாழ்த்துக்கள்..!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

