06-27-2005, 02:15 AM
வணக்கம். வாழிய நலம்.
கடிதம் கிடைத்தது. செய்தி அறிந்து திடுக்கிட்டேன். கோழைகளின் கைவரிசை இது என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. தயவுசெய்து மோகன் அண்ணாவிடம் எனது தாழ்மையான அனுதாபங்களையும் வணக்கங்களையும் தெரிவியுங்கள். தைரியமாக இருக்கச் சொல்லுங்கள். இப்படிப்பட்ட சோதனைகளின் காலகட்டங்களில்தான் நாம் மனவுறுதி கடைப்பிடிப்பது அவசியமாகிறது.
இப்போது யாழ் இணைய சேவை மீட்சி கொண்டுவிட்டதா என்பதை அறிய விரும்புகிறேன். உண்மையிலேயே ஒரு கவிதை எழுதி வைத்திருக்கிறேன். அதை அனுப்பவா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளேன். இறைவன் அருளால் எல்லாம் விரைவில் சரியாகி, யாழ் இணையம் மீண்டும் புதுவனப்போடும் பொலிவோடும் திகழ வேண்டுமாய்ப் பேரிறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். தயவுசெய்து நிலைமை பற்றி அறிவியுங்கள் .
என்றென்றும் நன்றியுடன்:
தொ. சூசைமிக்கேல்.