Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளின் இராஜதந்திரத்துக்கு....
#1
<b>புலிகளின் இராஜதந்திரத்துக்கு
கிடைத்திருக்கும் வெற்றி இது! </b>

ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண மற்றும் மீள்கட்டுமானத் துக்கான பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தாகி விட்டது. இனி என்ன, ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற மக்க ளின் வாழ்வில் வசந்தம் வீசும், அவர்களின் அவலம் தீரும், அன்றாடப் பிரச்சினைகள் அகன்றுவிடும் என்றெல்லாம் கருதலாமா? அப்படிக் கருதுவோமானால் அது வெறும் பகற்கனவே; அர்த்தமற்ற நினைப்பே.
ஜனாதிபதி சந்திரிகாவின் அரசியல் போக்கைத் துலாம்பர மாக அறிந்துகொண்டவர்களுக்கு இதுவிடயத்தில் உண்மை நிலை யைப் புரிந்துகொள்வது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல.
அப்படியானால் இவ்வளவு காலம் பேசி, இவ்வளவு இழு பட்டு, இந்தப் பொதுக்கட்டமைப்பில் ஒப்பமிட்டதால் தமிழர் தரப்புக்கு என்ன நன்மை? யாது பயன்? - என்ற கேள்விகள் எழுவது இயல்பானதே.
பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்தும்படி சர்வதேச சமூகம் - அமெரிக்கா முதல் ஜப்பான், நோர்வே, ஐரோப்பிய சமூ கம் வரை பல தரப்பும் - கொடுத்த பெரும் அழுத்தங்களுக் கும் மத்தியிலும் ஆறுமாத காலம் இதை இழுத்தடித்து, தென்னிலங்கையில் பௌத்த, சிங்களப் பேரினவாதத்தை இதற்கு எதிராகத் தூண்டிவிட்டு, அதற்கு வாய்ப்பான கள நிலைமையை ஏற்படுத்தி, இப்போது ஒப்புக்கு இந்த ஒப்பந் தத்திற்கு இணங்கியிருக்கிறார் ஜனாதிபதி குமாரதுங்க.
ஒப்பந்தத்துக்கு இணங்குவதற்கு அவர் காட்டிய பின் னடிப்பும், இழுபறியும் இந்த ஒப்பந்த வாசகங்களை நடை முறைப்படுத்துவதில் அவருக்கு இருக்கக் கூடிய ஈடுபாட்டை எமக்குத் தெளிவுபடுத்தும். தவிரவும் ஒப்பந்தத்துக்குத் தெற்கில் காட்டப்படும் கடும் எதிர்ப்பும் அதன் காரணமாக அரசுத் தரப்பு சிறுபான்மையாக இருக்கின்ற நிலைமையும் ஒப்பந்தத்தை அரசு எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தும் என்பதைத் துலாம்பரப்படுத்துகிறது.
ஆகவே, இந்த ஒப்பந்தம் மூலம், ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற நமது உடன்பிறப்புகளின் அவலம் நீக்கப்பட்டு விடும் என்றோ, அவர்களின் வாழ்க்கை வழமைக்குத் திரும் பும் என்றோ நாம் நம்புவதில் நியாயம் இல்லை.
ஆனாலும், இந்த ஒப்பந்தம் மூலம் சில இராஜதந்திர வெற்றிகளைத் தமிழர் தரப்பு ஈட்டியிருப்பதையும் நாம் மறக் கக்கூடாது. இந்த ஒப்பந்தத்துக்கு இலங்கை அரசுத் தரப்பை இணங்க வைத்ததன் மூலம் ஆழிப்பேரலையால் பாதிப்புற்றோரின் துயர்துடைக்கப்படாவிட்டாலும் சில அடிப் படை விடயங்களில் தமிழர் தரப்புக்கு அங்கீகாரத்தைப்பெற வைத்திருக்கின்றார்கள் இவ்விடயத்தைத் தந்திரோபாயமா கக் கையாண்ட புலிகளின் பிரதிநிதிகள்.
சரியோ, பிழையோ சிங்கள அரசுத்தரப்புக்கு அப்பால் தமிழ்ப் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக் கும் - ஒரு தனிநாட்டுக்கான கட்டமைப்புடன் இயங்கும் - புலிகள் அமைப்பு களத்தில் இருப்பதையும், அதனோடு இணங்கிச் செயற்படுவதன் மூலமே இப்பிராந்தியத்தில் நிவா ரண, அபிவிருத்தி, புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்பதையும் சர்வதேச சமூகம் யதார்த்தபூர்வமாக ஏற்றுக்கொள்ளவும் -
அதனடிப்படையில் புலிகளை அங்கீகரித்து, ஏற்று அவர் களோடு ஓர் உடன்பாட்டுக்கு வரும்படி இலங்கை அரசுத் தரப்பை சர்வதேச சமூகம் வற்புறுத்தவும் -
செய்திருக்கிறார்கள் இவ்விடயத்தைக் கையாண்ட புலிக ளின் அரசியல் விவகாரக் குழுவினர்.
ஏற்கனவே, இலங்கைத் தமிழர்களின் ஏகபிரதிநிதி களாக - அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக- விடுதலைப் புலி களை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசு ஏற்று, புலிகளோடு ஒப்பந்தம் செய்திருந்தது.
அப்போது அதைக் குறை கூறிக்கொண்டிருந்த ஜனாதி பதி சந்திரிகா குமாரதுங்கவும் அவரது கட்சியினரும் இப் போது இந்த ஒப்பந்தத்தில் புலிகளோடு ஒப்பமிட்டதன் மூலம் அந்த யதார்த்தத்தை அவர்களும் ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார்கள்.
ஆகவே, பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தம் மூலம் ஆழிப்; பேரலையால் பாதிப்புற்றோரின் அவலம் நீங்குமோ, இல் லையோ என்ற நம்பிக்கை ஏற்படாவிட்டாலும் அதன் மூலம் ஈழத்தமிழர்களின் - ஏக அதிகாரபூர்வ - பிரதிநிதிகள் யார் என்பது சர்வதேச மட்டத்திலும் இலங்கையின் பெரும்பான்மை யினரின் இரண்டு பெரும் கட்சிகளின் மட்டத்திலும் ஏற்று அங்கீகரித்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, பாதிப்புற்ற மக்களுக்கான சர்வதேச உதவிகள் சிங்கள அரசின் மத்திய வங்கிக்கோ அல்லது திறைசேரிக்கோ செல்லாமல் புலிகளின் செல்வாக்குள்ள ஓரமைப்பின் வழிகாட்டுதலில் சர்வதேச அமைப்பு ஒன்றின் கட்டுக்காவலில் - நேரடியாக அந்த மக்களுக்குச் செல்லும் ஒரு கொள்கைத் திட்டத்துக்கு இலங்கை அரசையும் ஜனாதிபதியையும் எழுத்தில் இணங்க வைத்திருக்கிறார்கள் புலிகள். இது நடைமுறைப்படுத்தப்படுமா, செயலில் நிறை வேறுமா என்றெல்லாம் கேட்கப்பட்டாலும், இந்த ஏற்பாட் டுக்கு கொள்கைரீதியிலேனும் இலங்கை அரசை இணங்க வைத்தது - சம்மதிக்கச் செய்தது - தமிழர் தரப்புக்கும், புலிகளின் இராஜதந்திரத்துக்கும் ஒரு பெருவெற்றியாகும்.
இரண்டு தசாப்தகால யுத்தத்தினால் பாதிப்புற்று தமது உடைமைகள், சொத்துகள், நிலபுலன்கள், உறவுகளை இழந்து அன்றாட ஜீவனோபாயத்துக்கு வழியின்றி பல்லாயிரம் தமிழர்கள் நலன்புரி நிலையங்களில் இன்னும் வாழ்கின்றார்கள். ஆழிப்பேரலை அகதிகளை விட இவர்களின் எண்ணிக்கை யும் பாதிப்பும் அதிகம்.
இவர்களுக்கான ஒரு புனர்வாழ்வுத் திட்டமோ அல்லது இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளோ நடைமுறைக்காகப் பரிசீலிக்கப்படும்போது, திறைசேரி ஊடாக அல்லாமல் தமிழர் தரப்புக்கு நேரடியாக நிதி கிடைக்கும் ஓர் ஏற்பாட்டுக்கு அரசை இனிக் குழப்பமின்றி இணங்க வைக்கமுடியும்.
அதற்கு நல்ல முன் உதாரணமாக இந்தப் பொதுக்கட் டமைப்பு உடன்பாட்டு ஏற்பாடுகள் அமைந்துள்ளன.
இந்த வகையில் பார்த்தால் பொதுக்கட்டமைப்பு உடன்பாடு அதன் நோக்கத்துக்கான விடயங்களில் தமிழ ருக்கு அதிக நன்மை எதனையும் தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தாவிட்டாலும் அதை உருவாக்குவது தொடர்பான விடயத்தில் புலிகளின் இராஜதந்திரம் பெரு வெற்றியீட்டியிருக் கிறது என்பது மட்டும் தெளிவு.

<b>ஆசிரியர் தலையங்கம்- உதயன்</b>
Reply


Messages In This Thread
புலிகளின் இராஜதந்திரத்துக்கு.... - by hari - 06-26-2005, 04:32 AM
[No subject] - by Nitharsan - 06-26-2005, 06:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)