10-01-2003, 07:57 AM
<span style='font-size:30pt;line-height:100%'>கற்பை சோதித்த கற்பூரம்!</span>
சேலத்தில் கடந்த வாரம் நடந்த கொடூரச் சம்பவம் இது!
சேலம் அரசு பொறியியல் கல்லூரிக்குப் பின்பக்கம் உள்ளது குண்டுக்கல். இங்கு வசித்துவரும் கந்தசாமி - செல்லமாள் தம்பதிக்கு திருமணமாகிப் பதினான்கு வருடங்களாகிவிட்டன. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். சந்தேகப் புத்தி கொண்ட கந்தசாமி, அவரது மனைவி செல்லம்மாள் கையில் கற்பூரத்தைக் கொளுத்தவைத்துக் கற்பைச் சோதித்திருக் கிறார்.
பாவம் செல்லம்மாள்..! அவரது கையில் தீக்காயம். ரொம்ப சிரமத்துடன் நடந்ததை நம்மிடம் விவரித்தார் செல்லம்மாள்.''எங்க வூட்டுக்காரருக்கு வேற ஒரு பொண்ணுகூட சகவாசம் இருக்குங்க. எப்ப பார்த்தாலும் அவகூடவேதான் சுத்துவாரு. இது ஊருக்கே தெரியும். நான் எதுனா கேட்டா என்னைப் போட்டு அடிப்பாரு. நானும் கண்டுக்கறதே இல்ல.
ஒரு நாள் என் சக்காளத்தியா என் வீட்டுக்கே வந்து, 'இந்த வீடு என்னுது... காலி பண்ணுடி'னு சண்டை போட் டுட்டுப் போனா. அப்பத்தான் நான் எங்க வூட்டுக்காரரைத் திட்டினேன். என்னை அடிச்சு வீட்டைவிட்டுத் துரத்தினாரு. எங்க சித்தப்பா வீட்டுல போய் கொஞ்சநாள் இருந்துட்டு திரும்பி வந்தேன்.
'இத்தனை நாள் எங்கடி போன? நீ தனியா போனியா.. இல்ல, வேற எவன்கூடவாவது போனியா? உன்னை எப்படி வீட்டுக்குள்ள சேர்க்கிறது..?' - இப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடி திட்டி சண்டை போட்டாரு. நான் புள்ளைங் கமேல சத்தியம் பண்ணியும் அவரு நம்பல. கடைசியா என் புள்ளைங்களைப் படுக்கவெச்சு அவுங் களைத் தாண்டினேன்.
அப்பக்கூட, 'இல்லடி... நீ வேற எவன்கூடவாவது படுத்திருப்பே'ன்னார். உடனே, வெளிய எங்கேயோ போயிட்டு கையில ஒரு கட்டி கற்பூரத் தோட திரும்பி வந்தாரு. 'இந்த கற்பூரத்தை உன் உள்ளங்கையில வச்சி கொளுத்திக்க... நீ எவன்கூடவும் படுக்கலன்னா இந்த கற்பூரம் உன்னை சுடாது'னு சொல்லி கற்பூரத்தைக் கொடுத்தாரு. எனக்கு வேற வழி தெரியலை. கற்பூரத்தை கையில வெச்சுக் கொளுத்திக் கிட்டேன். நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் சூடு தாங்கினேன். அதுக்குமேல தாக்குப்புடிக்க முடியாம கற்பூரத்தைக் கீழே போட்டுட்டேன்.
உடனே அவரு, ''எனக்கு அப்பவே தெரியும்டி... நீ வேற எவன்கூடவோ சுத்திட்டு வந்திருக்கே?'னு கண்டபடி திட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டாரு. அதுக்குமேல என்னால பொறுக்க முடியலை. போலீஸ்ல போய் புகார் கொடுத்துட்டேன்'' என்று சொல்லி முடித்தபோது, செல்லம்மாளின் கண்களில் நீர் கோத்திருந்தது.
ஊர்க்காரர்கள் சிலரிடம் பேசினோம். ''கந்தசாமிக்கு எப்பவும் சந்தேக புத்திதாங்க. அதுவுமில்லாம எப்பவும் குடியும் கூத்தியாவுமா சுத்திட்டு இருப்பான். எல்லாத்தையும் அந்தப் புள்ள பொறுத்துக் கிட்டு போச்சு. பாவிப் பய கடைசியா கற்பூரத்தை கையில வச்சி கொளுத்தச் சொல்லியிருக்கான். இப்பக்கூட அந்தப் புள்ள போலீஸ#க்கு போயிருக்காது. நாங்க எல்லாம் தைரியம் சொன்ன பிறகுதான் போலீஸ்ல புகார் கொடுத்துச்சி'' என்றார்கள்.
இந்த வேதனையான வழக்கை விசாரிக்கும் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அழகு ராணி நம்மிடம், ''அந்த பொண்ணை ரொம்பவும் சித்ரவதை பண்ணியிருக்கான்.
அறிவியல் எவ்வளவோ வளர்ந்திருக்கும் காலக்கட்டத்தில், கட்டிய பொண்டாட்டி மேல் சந்தேகப்பட்டு கையில கற்பூரத்தை ஏத்தியிருக்கான்னா, அவன் எப்படிப்பட்ட ஆளா இருப்பான்? கம்ப்ளெயிண்ட் வந்ததும் தேடிப்பிடிச்சு கந்தசாமியை அரெஸ்ட் பண்ணிட்டோம்...'' என்றார் கவலையோடு.
கடைசியாக கந்தசாமியோடு பேசும் வாய்ப்பும் நமக்குக் கிடைத்தது. அப்பவும் அவர் ''அவமேல எனக்கு டவுட் இருந்துச்சு. அதனாலதான் அப்படி செய்யச் சொன் னேன். என்னை ஜெயிலுக்கு அனுப்பிட்டு அவமட்டும் பெருசா பொழைச்சிடுவாளா? நான் செஞ்சது தப்பே இல்லீங்க..'' என்றே சொல்லிவிட்டுப் போனார்.
- கே. ராஜாதிருவேங்கடம்
படம்: வி. செந்தில்குமார்
நன்றி