06-25-2005, 08:35 AM
kuruvikal Wrote:[size=14]<b>எமது தாய்க் களமான யாழ் களம் செயலிழந்தது கண்டு மிக மனவருத்தமும் வேதனையும் அடைந்தோம்...!
மீண்டும் யாழ் களம் புதுப்பொலிவுடன் இயங்க வாழ்த்துவதோடு கள உறவுகள் அனைவரும் அதற்கு விரைந்து ஒத்துழைப்போமாக..!
களத்தைத் தாக்க யாழ் இணைய எதிரிகள் தெரிவு செய்த காலம் குருவிகளுக்கு பொல்லாத காலம்..அதுமட்டுமன்றி யாழ் இணையம் மற்றும் களத்தின் மீதான இந்த இணையத் தாக்குதல் சந்தர்ப்பம் பார்த்து திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது..! மோகன் அண்ணா இது தொடர்பில் மேலும் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்..!
[b]யாழ் இணையம் மற்றும் களத்தின் மீதான இணையத் தாக்குதலுக்கும் களத்தில் குருவிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுகளுக்கும் குருவிகள் எமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை
[b]என்றும் நட்புடன் அன்பின் குருவிகள்...!</b>
எதற்கு இந்த மனவருத்தம் குருவிகள்? களஉறவுகளுக்குள் முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் அவர்கள் இப்படியான வேலைகளில் ஈடுபடமாட்டார்கள் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம்.
இது விசமிகள் சிலரால் களத்தின் வளர்ச்சி பொறுக்கமுடியாமல் செய்யப்பட்ட தாக்குதல். களஉறவுகள் நமக்குள் எவ்வளவுதான் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், நமக்குள் ஒவ்வொருவர் மீதும் மானசீகமான நம்பிக்கை உள்ளது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து மறுபடியும் யாழ் களத்தை முழுமையாக மீளஇயங்க வைப்பதற்கு செயலாற்றுவோம்.
அனைத்து களஉறவுகளுக்கும்,
வாருங்கள்! வந்து களத்தை மறுபடியும் உற்சாகப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களும், ஆக்கங்களும் தாம் மறுபடி யாழ்களத்தை உற்சாகமாக செயற்பட வைக்கும். எனவே முன்னைவிட மிகமிக உற்சாகத்துடனும் ஒற்றுமையுடனும் களத்தில் கருத்தாடுங்கள், அன்பை பகிருங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

