09-30-2003, 09:33 PM
இலக்கிய சந்திப்பு வைக்கிறாங்களாம்.. ஆகா.. கடல் என்ற சுஞ்சிகையை நடாத்தியபொழுது சில இலக்கிய சந்திப்புகளுக்கு போயிருக்கேன்.. அவரவர்கள் வந்து தமது அரசியலை பேசிவிட்டு போகும் பொழுதுபோக்குச் சந்தியாகத்தான் அந்தச் சந்திப்பு இருந்தது. அப்போது அமரர் சின்ன இராஜேஸ்வரன் அவர்கள் இலக்கியச் சந்திப்பினுாடாக உருப்படியாக ஏதாவது செய்யுங்களேன்.. தாயக மக்களுக்குத்தான் ஏதாவது செய்ய மனமில்லையானாலும்.. புகலிடத்தில் வாழும் சிறுவர்களுக்காக தான் வெளியிடும் 'சிறுவர் அமுதம்" எனும் சஞ்சிகையையாவது வெளியிடுங்களேன் எனக்கேட்டார். எவரும் முன்வரவில்லை.. காரணம்.. யார் செய்வது.. செய்தால் எந்த அரசியல் குழுவுக்கு பெயர் போகும் என்ற தயக்கம்.. அது சரி புஸ்பராஜா அவர்களே.. இப்போது இலக்கியச் சந்திப்பு ஏதாவது உருப்படியானதை செய்திருக்கிறதா.. அல்லது முன்பு சீர்திருத்தம் பேசிய பலர் சீதணம் வாங்கிக் கட்டியதுபோலதானா அல்லது நட்பென பழகிய பெண்ணியக்காரர் கணவனை பிரிந்து நண்பருடன் வாழ்க்கை நடாத்துவதுபோலத்தானா? ஏதாவது உருப்படியாக செய்திருந்தால் அறியத் தாருங்கள்.. பாராட்டி வரவேற்கக் காத்திருக்கிறேன்.
.

