06-14-2005, 11:55 AM
Niththila Wrote:பகுத்து அறிவதற்கு பலகளமும் பார்க்கவேண்டும் பகுத்து ஆராய்ந்து பார்க்கவேண்டும். இங்கு கருத்து எழுதும் யாராவது ஒருவர் அதை செய்கின்றீர்களாவென்றால் ஒருவாருமில்லை. வளமானவாழ்க்கைதேடி புலம்பெயர்ந்துவந்து இல்லாத பொய்யெல்லாம்கூறி நீங்களே உங்கள் செய்கைகளுக்கு நியாயம் (justifying your actions) தேடுகிறீர்கள். அதுதான் இத்தனை களவு பொய் சூது வாது.Sooriyakumar Wrote:Mathan Wrote:எதுதான் தமிழரின் மதம் அல்லது வாழ்க்கை முறை? இப்போது நாம் செய்யும் பெரும்பாலான சடங்குகளை அது எம்முடையதல்ல அர்த்தமற்றது என்று சொல்கிறீர்கள். அப்படியானால் எதுதான் நமது கலாச்சாரம் அப்படி ஒன்றே நமக்கு இல்லையா? எனக்கென்னவோ நாம் பகுதறிவோடு முற்போக்காக சிந்திக்கிறோம் என்ற பெயரில் நமது உடைமைகளை இழக்கிறோம் போல தோன்றுகின்றது. மேற்குலத்தவரோ நமது வாழ்க்கை முறையில் கலாச்சாரத்தில் உள்ள நல்ல பண்புகளை அறிய முயற்சிக்கிறார்கள். நாம் நவ நாகரீகத்தை அளவுக்கதிகமாக பின்பற்றுகிறோமோ?தமிழருக்கு எந்த மதமும் சொந்தமில்லை. எந்தவொரு வாழ்க்கைமுறையுமில்லை. சடங்குகள்கூட மேலைநாட்டவருடையது நமக்கொரு கலாச்சரம் கிடையாது. நமக்கு பகுத்தறிவு சிடையாது. முற்போக்கு சிந்தனைக்கு களவு பொய் சூது வாது நாடுகிறோம். நமக்கென்று உடைமைகள் கிடையாது. வன்முறையே நமது கலாச்சாரம். காட்டுமிராண்டித்தனமே நாம் படித்தவை இவையைவிட வேறென்னவேண்டும் தமிழீழத்திலிருந்து வளமானவாழ்க்கைதேடிவந்து அரட்டையடிக்கும் நமக்கு?
அது சரி இப்படி பகுத்தறிவு இல்லாதவையோடு எதனை பற்றி பேசுறது? :roll: :roll:

