Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம் பெயர் நாட்டில் குழந்தைகளுக்கு தமிழ்க்கல்வி அவசியமா?
#13
பரந்துபட்ட அளவில் தமிழ் மொழியின் ஆதிக்கம் இல்லாமையினாலேயே இப்படியான கேள்விகள் எழுகின்றன. ஒரு மொழி பரந்துபட்ட அளவில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்றால் அம்மொழியில் புதுப்புது சொற்களை உருவாக்கி அறிவியல் சம்மந்தமான அனைத்து நூல்களும் அம்மொழியில் கிடைக்கக்கூடியதாக இருக்கவேண்டும். தற்போது இந்தியாவில் தமிழிற்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்திருப்பதால் சில நம்பிக்கைதரும் சில விடயங்கள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன. எமது பிள்ளைகளுக்கு எமது தாய் மொழி கற்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தினால்த்தான் அவர்களும் விரும்பி முழுமனதோடு கற்க முன் வருவார்கள். இதற்கு நாம் இதுவரை என்ன செய்திருக்கின்றோம். மொழிக்கல்விக்கான புத்தகங்களை புலத்தில் வெளியீடுவோர் கூட பணம் பண்ணும் நோக்கிலேயே செயற்படுகின்றார்களே தவிர பிழையான தமிழ்க்கல்வி பிள்ளைகளைச் சென்றடைவதுபற்றி கவலைப்படுவதில்லை. முதலில் பிள்ளைகள் பயப்படுவதே தமிழ்மொழியின் எழுத்துக்களின் எண்ணிக்கையைப் பார்த்தே. அதனால் உயிர் எழுத்தை குறிப்பிட்ட வயது வரை பின் மெய் எழுத்ஐத குறிப்பிட்ட வயதுவரை அதுபோல் உயிர்மெய் எழுத்தை குறிப்பிட்ட வயதிற்குப்பின் என அட்டவணைப்படுத்தி அவர்கள் பயத்தையும் ஆரம்பத்திலேயே போக்கினால்த்தான் அவர்களும் பயமின்றி படிப்பார்கள். அதுபோல் படிப்பிக்கும் முறைகளிலும் தேவையான மாற்றங்களை கொண்டுவரவேண்டும். இவற்றை நாம் நேரத்தோடு செய்யாதுவிட்டால் புலத்தில் எமது 3வது தலைமுறையிடம் தழிழைத் தேடித்தான் பிடிக்க வேண்டும். என்னடா இவன் ஏதோ தலையங்கத்திற்கு ஏதேதோ எல்லாம் எழுதுகின்றானென்று யோசிக்காதீர்கள். ஒரு விடயத்தின் அடிப்படைத் தவறுகளை சிந்திக்காது மேலோட்டமாக விடயத்தை அலசுவதில் எந்தவித பலனுமில்லை. முக்கியமாக எமது பிள்ளைகள் தமிழ்மொழி அறந்திருந்தால்த்தான் உலகமெல்லாம் பரந்து வாழும் எம் உறவினருடனோ அல்லது அவர்களின் பிள்ளைகளுடனோ பேச முடியும். ஆம் தமிழ்தான் அவர்களுக்கு இணைப்பு மொழி. சிலர் கேட்கலாம் ஏன் ஆங்கிலத்தையும் இணைப்பு மொழியாகப் பாவிக்கலாமென்று. ஆனால் ஐரோப்பாவில் எல்லா நாடுகளிலும் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதென்றில்லை. அத்தோடு எத்தனை பெற்றோர்களுக்கு சராசரியான ஆங்கில அறிவு உண்டு. எனவே முதலில் நம் பிள்ளைகளிற்கு இலகுவாக தமிழ் கற்றுக்கொடுப்பதற்கு வழி சமைப்போம்
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 06-13-2005, 09:22 PM
[No subject] - by sayanthan - 06-13-2005, 09:27 PM
[No subject] - by kuruvikal - 06-13-2005, 09:43 PM
[No subject] - by sayanthan - 06-13-2005, 10:04 PM
[No subject] - by MUGATHTHAR - 06-13-2005, 11:25 PM
[No subject] - by ilakkiya - 06-13-2005, 11:45 PM
[No subject] - by இளைஞன் - 06-14-2005, 01:20 AM
[No subject] - by kirubans - 06-14-2005, 01:34 AM
[No subject] - by narathar - 06-14-2005, 01:42 AM
[No subject] - by kuruvikal - 06-14-2005, 05:33 AM
[No subject] - by Vasampu - 06-14-2005, 10:47 AM
[No subject] - by வியாசன் - 06-29-2005, 10:01 PM
[No subject] - by ampalathar - 07-10-2005, 10:49 PM
[No subject] - by narathar - 07-10-2005, 11:27 PM
[No subject] - by ஈழத்துளி - 07-17-2005, 09:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)