Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிலி நாட்டில் பயங்கர பூகம்பம்
#1
சிலி நாட்டில் பயங்கர பூகம்பம்: அந்தமானிலும் நிலநடுக்கம்
ஜூன் 14, 2005

சாண்டியகோ போர்ட்பிளேர்:

தென் அமெரிக்க நாடான சிலியில் இன்று காலை மிக பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.9 என்ற அளவுக்குப் பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பலர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.


நாட்டின் வட பகுதியில் பொலிவியா, பெரு நாட்டு எல்லைகளை ஒட்டிய மலைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த டிசம்பரில் ஏற்பட்ட இந்தோனேஷிய நில நடுக்கத்துக்கு (9.0) பின் ஏற்பட்டுள்ள 3வது மிகப் பெரிய பூகம்பம் இது என அமெரிக்க பூகம்பவியல் மையம் அறிவித்துள்ளது. (இரண்டாவது பெரிய நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவிலேயே கடந்த மார்ச் 28ம் தேதி உண்டானது.)

இன்றைய சிலி நாட்டு சக்தி வாய்ந்த பூகம்பத்தால் அமெரிக்காவின் ஹவாய் கடலோரப் பகுதியில் சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சம் பரவியது. ஆனால், கடலடியில் நிலநடுக்கம் ஏற்படாததால் சுனாமிக்கு வாய்ப்பே இல்லை என அமெரிக்க மையம் தெரிவித்துள்ளது.

பயங்கர நிலநடுக்கத்தால் கட்டடங்கள் உடைந்து விழுந்தன. இதில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியவில்லை.

இந் நிலையில் இன்று அந்தமான் நிகோபார் தீவுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
Reply


Messages In This Thread
சிலி நாட்டில் பயங்கர பூகம்பம் - by hari - 06-14-2005, 10:27 AM
[No subject] - by kurukaalapoovan - 06-14-2005, 11:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)