06-14-2005, 05:26 AM
உண்ணாவிரத காலத்தில் இரவில் நடமாடிய ஓமல்பே சோபித்தவை படம் பிடித்த ஊடகவியலாளர் தேடப்படுகிறார்
உண்ணாவிரத காலத்தில் பகல் முழுவதும் உறங்கிய சோர்வான நிலையிலிருந்த ஓமல்பே சோபித்த இரவில் நடமாடும் போது புகைப்படம் பிடித்த ஊடகவியலாளரை ஜாதிக ஹெல உறுமயவினர் தேடி வருகின்றனர். பொதுக்கட்டமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டி தலதாமாளிகைக்கு முன்னால் சாகும்வரையிலான உண்ணாவிரதம் அனு;டித்துவந்த ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் ஓமல்பே சோபித்த தேரர், இரவு வேளையில் நடமாடியதை ஊடகவியலாளரொவர் புகைப்படம் பிடித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளரை ஜாதிக ஹெல உறுமயவினர் தற்பொழுது தேடி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு நாளும் இரவு 7மணிக்கு தலதா மாளிகை மூடப்பட்டு பின்னர் 8 மணிக்கு தலதாமாளிகைக்கோ அல்லது மாமலுவவிற்கோ யாரும் செல்லமுடியாது.
எனினும், ஓமல்பே சோபித்த தேரர் உண்ணாவிரதம் அனு;டித்தவேளை, மாமலுவில் அமைந்திருந்த உண்ணாவிரத மேடைக்கு ஹெல உறுமயவின் ஓரிரு அங்கத்தினரும், பௌத்த பிக்குக்களும் சென்றுவந்துள்ளனர்.
அவர்களுடன் ஊடகவியலாளரொவரும் உட்புகுந்து உண்ணாவிரத மேடையைவிட்டு வெளியே இறங்கிநின்ற சோபித்த தேரரை புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த ஊடகவியலாளரை பிடிப்பதற்கு அங்கு கூடநின்ற பௌத்த பிக்குகள் முயற்சித்தபோதும், ஊடகவியலாளர் தப்பிச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்பொழுது அந்த ஊடகவியலாளரை ஜாதிக ஹெல உறுமயவினர் தேடிவருவதாகத் கூறப்படுகிறது.
இதேவேளை, உண்ணாவிரதம் அனு;டித்துவந்த ஓமல்பே சோபித்த தேரரையும், உண்ணாவிரம் இருப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையையும் அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸார் நீதிமன்றத்தில் அனுமதிபெற்றிருந்ததாகவும்,
இதனையறிந்த ஓமல்பே சோபித்த தேரர் தனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டதாகவும் பிறிதொரு தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.