06-14-2005, 01:34 AM
சிறுவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்கள், பெரும்பாலும் இலங்கையில் காணப்படும் புத்தகங்களை ஒத்திருக்கின்றன, இவை இங்கு வாழும் குழந்தைகளுக்கு தமிழை ஊட்டமுடியுமா என்பது கேள்விக்குறியே. உதாரணமாக, கழுதை பொதி சுமக்கும் கதையும், பனை மரத்தைப் பற்றிய கதையும், அவற்றினை நேரில் பார்க்காத குழந்தைகளுக்கு தமிழில் விருப்பத்தை உருவாக்கமாட்டா. எனவே புலம்பெயர் சூழலில் காணப்படுபவற்றையே புத்தகங்களில் புகுத்த வேண்டும்.
மேலும், புலத்தில் உள்ள குழந்தைகளுக்குத் தமிழ் முதல் மொழியா, இரண்டாவது மொழியா என்று யோசிக்கவேண்டும். நாம் சிந்திக்கும்போது எந்தமொழியில் எமக்குள்ளேயே விவாதம் செய்யுகின்றோமோ அதுவே எமது முதல் மொழியாக இருக்கும். ஊரில் பிறந்து வளர்ந்தவர்களுக்குத் தமிழ் முதல் மொழிபோல், இங்கு பிறந்த குழந்தைகளுக்கு, அவர்கள் வசிக்கும் நாடுகளில் உள்ள மொழிதான் முதல் மொழியாக இருக்கும் (4 - 5 வயது வரை தமிழில் பேசினாலும், பின் அது சில குழந்தைகளுக்கு மறந்துவிடுகின்றது)
எனவே தமிழை இரண்டாவது மொழியைக் கற்பிக்கும் முறையில் கற்பிக்கவேண்டும்.

<b> . .</b>