06-14-2005, 12:36 AM
இணையத்தில் படித்த சில கருத்துக்கள்
புலம் பெயர்ந்த நாடுகளில் பல சிறுவர் தமிழ் கல்வி நிறுவனங்கள் தமிழ் கல்வியை நோக்கிய கவனத்தைச் செலுத்துகின்றனர். இந்த முயற்சியில் சிலர் இதை வியாபாரமாகவும், சிலர் தமது குறுகிய நோக்கிலும், பலர் பரந்த நோக்கிலும் செயற்படுகின்றனர்.
இந்த முயற்சியில் ஈடுபடும் 99 வீதம் பேர் தமிழ் கல்வி புலம் பெயர்ந்த இந்தக் குழந்தைகளுக்கு, ஏன் தேவை என்பதை புரியாத நிலையில் தமிழைக் கற்பிக்கின்றனர். கற்பிப்போர், பெற்றோர், குழந்தைக்கு ஏன் தமிழைக் கற்பிக்க வேண்டும் என்ற கேள்விக்கு சரியான நிலையில் இருந்து இக்கல்வியைப் புகட்டாமையினால், இந்த முயற்சி எதிர்காலத்தில் பலத்த தோல்வியை ஏற்படுத்தும் விடயமாகவுள்ளது.
பொதுவாக இன்று குழந்தைக்கான கல்வி புகட்டலில் பெற்றோரும், கற்பிப்போரும் கடைப்பிடிக்கும் அடிப்படை என்ன எனப் பார்ப்போம்.
1) புலம் பெயர்த்த நாடுகளில் உள்ள மொழி தெரியாத பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையில் ஒரு தொடர்பு பாலமாக தமிழைப் பயன்படுத்தல்.
2) மொழி தெரிந்த, தெரியாத பெற்றோர்கள் ஊரில் உள்ள தமது பெற்றோருடன், உறவினருடன் தொடர்புகொள்ள.
3) நாட்டுக்கு திரும்பிச் செல்ல, என நினைக்கும் ஒரு கணிசமான பகுதியினர்.
4) நாம் தமிழர் எனவே தமிழ் தெரிய வேண்டும் என்போர்.
இந்த வரையறையைத் தாண்டி அல்லது உள்ளடக்கிய தமிழ் கல்வி சிறு அளவில் புலம் பெயர்ந்த நாடுகளில் புகட்டப்படுகிறது. இது பரந்த அளவில் புகட்டப்படாமையும், அதை புறக்கணிப்பதும், சிறுமைப்படுத்துவதும் பெரும்பான்மையாக உள்ளது.
இது ஏன்? என்ற கேள்வியின் ஊடாக தமிழ் கல்வி கற்பிக்கும் நோக்கை எடுத்துக்கொள்வோமாயின் அது ஒரு குறுகிய எல்லை கொண்டதாக அமைவது ஒரு அடிப்படையாகும்.
உதாரணமாக பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையில் ஆங்கிலம் தெரிந்தால், அல்லது வேறு ஒரு பொது மொழி தெரிந்தால், அங்கு தமிழ் கல்வி தேவையற்றது ஆகிவிடுகிறது. இதேபோல் பெற்றோரின் பெற்றோருக்கும் (பேரர்மாருக்கு) அம்மொழி தெரிந்துவிடின் அங்கு தமிழ் மொழி தேவையற்றது ஆகிவிடுகிறது. எனவே தமிழர் தமிழ் கற்கவேண்டும் என்ற கருத்து பின்னர் தேவை அற்தாகிவிடுகின்றது.
அதாவது தமிழ் கற்பிக்கும் நோக்கம் பரந்த அடிப்படையில் ஏன் தேவை என்பதைப் புரிந்து கொள்ளாத வரை இந்த கற்பித்தல் என்பது ஒரு நிலையில் களைத்துப் போன, அவசியமற்ற, நேர விரையோகம் கொண்ட விடையமாக கற்பிப்போருக்கும், பெற்றோருக்கும், குழந்தைக்கும் எற்படும் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்வது அவசரமான விடையமாகும்.
இன்று உலகில் உள்ள ஆயிரக்கணக்காண மொழிகளில் தமிழும் ஒன்று. தமிழ் உலகில் அதிகமாக பேசும் மொழிக் கூட்டத்தினருள் முதல் 15வது இடத்தினுள் உள்ளது. இருந்த போதும் தமிழ் இன்று சமூகத்தின் வாழ்வை தீர்மானிக்கும் ஒரு தனிமனித பொருளாதார ஏற்றத் தாழ்விற்கு பங்களிக்க முடியாத நிலை உள்ளது. அதேவேளை தமிழ் புறக்கணிப்பும் இன்னும் ஒரு அம்சமாகும்.
புலம் பெயர்ந்த நாங்கள் இங்கு தமிழை எமக்கிடையில் பரிமாறுவது கூட அந்த நாட்டு மொழி எந்தளவிற்கு தெரிகிறது என்பதுடன் தொடர்புடைய விடையமாகியுள்ளது. அப்படி உள்ள போது குழந்தைக்கு தமிழ் கற்பிப்பது என்பது கடினமாக உள்ளது. அதுவும் குழந்தை இந்த மண்ணில் பிறந்து இந்த நாட்டு மொழியைத் தாய் மொழியாகக் கொள்ளும் போது அக்குழந்தை தமிழைக் கற்கும் தேவை அற்றதாகிறது.
மொழி என்பது ஒரு மக்கள் கூட்டத்துடன் தொடர்பு கொள்ள மட்டுமே இருந்து போது, இன்று உலகில் பொருள் தேடும் விடயத்துடன் தொடர்புடையதாகவும், சீரழிந்தும் உள்ளது. குழந்தைக்கு அந்தத் தேவை இங்குள்ள மொழியால் தீர்க்கப்படும் பட்சத்தில் ஏன் தமிழ் மொழி தேவை என்பது குழந்தையின் நிலையாகிவிடும். தமிழ் மொழி என்பது ஏன் தேவை? என்ற கேள்வியை எழுப்பாத, அதை கற்கை நெறிக்குள் உள்ளாக்காத தமிழ் கல்வி என்பது வரையறுக்கப்பட்ட எல்லையுடன் முடிவிற்கு வரும்.
எம்மைப் பொறுத்தவரையிலும் சரி, குழந்தையைப் பொறுத்த வரையிலும் சரி ஏன் தமிழ் கல்வி தேவை என்று கேட்பின் அது ஒரே ஒரு அடிப்படை விடையத்தை மட்டும் சார்ந்துள்ளது. அது நாம் இங்கு இரண்டாந்தரப் பிரஜை என்பதால் மட்டுமேயாகும். நாம் கறுப்பர்களாக இருப்பது, மூன்றாம் உலகத்தவர்களாக இருப்பது, வறிய நாட்டு மக்களாக இருப்பது என்ற ஒரே ஒரு அடிப்படை மட்டுமே தமிழ் கற்கக் கோருகிறது. அதாவது நான் யார்? எனது சொந்த அடிப்படை என்ன? நாம் ஏன் இங்கு வந்தோம்? ஏன் மூன்றாம் உலக நாடுகள் வறுமையில் உள்ளது? நிற வேற்றுமை என்றால் என்ன? என்ற கேள்விகளில் இருந்தே தமிழ் கற்கும் தேவை எழுகிறது.
நாம் இங்கு இரண்டாந் தரப் பிரஜையாக, வேண்டப்படாத பிரஜையாக உள்ளோம். எம்மீதான நிற, இன, அகதி என்ற போர்வையில் ஒரு தாக்குதலை எல்லாத் துறையிலும் சந்திக்கின்றோம்.
நாம் இந்த மக்கள் கூட்டத்துக்கு ஒரு மனிதனாக அடையாளப் படுத்து முடியாத நிலை மட்டுமே எமது சொந்த அடையாளத்தை தேடவைக்கிறது. அந்த சொந்த அடையாளம் என்பது தமிழை வெறுமனே தெரிந்து கொள்வதனால் மட்டும் தீர்ந்து விடுவதில்லை. தமிழை நான் ஏன் கற்க வேண்டும் என்ற கேள்வியை, குழந்தைக்குப் புகட்டும் போது பெற்றோர் கற்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
அநேகமாக 99வீதமான பெற்றோர் உலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத ஒரே சூனிய நிலையில் உள்ளனர். சோறு, அதன் கறியைப் பற்றியும், உடுப்பைப் பற்றியும், மலிவு விலைப் பட்டியலைப்பற்றியும்,.. .. ... என எண்ணற்ற விடயத்தை உப்புச் சப்பின்றி கதைக்கும் பெற்றோர் உலகில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி தெரியாது உள்ளனர்.
தமக்கு எதிராக இந்த நாடுகளில் உருவாக்கிவரும் சட்டங்கள், புதிய ஒடுக்கு முறைகளைப் பற்றியும் தெரியாது உள்ளனர். இந்த நிலையில் தான் குழந்தைகள் ஏன் தமிழ் கற்க வேண்டும் என்ற கேள்வியை அவர்கள் முன் கேட்க வேண்டி உள்ளது. இந்த கேள்விக்கான பதிலை தமிழ் மொழிக் கல்விக் கூடாக சொல்லாத வரை குழந்தையோ, பெற்றோரோ தமிழ் கல்வி மீதான தேவையான ஆர்வத்தைப் பெற முடியாது.
இன்னும் ஒரு பக்கத்தில் எமது குழந்தைகள் தமிழ் ஆர்வம் இருக்கிறதோ, இல்லையோ தமிழ் சினிமாப் பாடல்களை பாடுகின்றனர். அந்த சொற்களில் சில அர்த்தங்கள் தெரிந்தும், தெரியாத வகையில் அந்தப் பாடல்களை தெரிந்து கொள்கின்றனர்.
இங்கு ஒரு குழந்தை, ஒரு பாடலை, கதையை ரசிக்கின்றது, விரும்புகின்றது என்பது தமிழை கற்க விரும்புகிறது என்று யாரும் கருதி முயற்சி எடுப்பின் அது ஒரு பொய்ப் படமாகவே அது இருக்கும்.
ஆர்வம், விருப்பு என்பது வேவ்வேறு நோக்கத்தைக் கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மீதான ஆர்வம் என்பது அதை ஏன் கற்க வேண்டும் என்ற ஒரே விடையில் மட்டுமே ஏற்பட முடியும்.

<b> . .</b>