06-21-2003, 12:31 AM
IQ இன் சரியான வரைவிலக்கணம் என்ற ஒன்று சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது ஆரம்பத்தில் கணிதம் விஞ்ஞானம் சார்ந்ததாக அதை வரையறுத்தனர் ஆனால் பெரும்பாலான பெண்களின் ஆற்றல் மொழி கலை போன்றவற்றில் இருந்ததால் அதையும் இணைத்தே தற்போதய IQ வரையறுக்கப்படுகிறது.
ஆணாதிக்கம் என்பது எல்லா உயிரினங்களிலும் பொதுவாக காணப்படும் ஒரு விடயம். ஆனால் மனிதனோ அவனுக்கே சிறப்பான ஆறாவது அறிவாகிய பகுத்தறிதிறனுடையவன். இதன்பொருட்டு தம் துணையை மதித்தல், சமத்துவம் பேணல் என்பன முக்கியமாக கருதப்படுகின்றன. இங்குதான் கீழைத்தேய (எமது கலாசாரம்) பெண் சமத்துவம் மேலைத்தேயவரினதிலிருந்து வித்தியாசப்படுகிறது.
ஆண்கள் இவ்வாறு செய்கிறார்கள் அதற்கு சமனாக பெண்களும் இவ்வாறு செய்தால் என்ன என்பது மேலைத்தேய பாணி.....இது இயற்கையின் படைப்பிற்கு எதிராக புதிய மாற்றங்களை எதிர்பார்க்கும் ஒரு முயற்சி......இது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் முழுமையாக வெற்றியளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.......
இயற்கையோடு ஒன்றிவாழும் எம்கலாசாரத்தில் நாம் பெண்களின் தனித்துவமான திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் திறமையை வளர்த்து, உச்ச பயன் பெறுகிறோம். ஆனால் அதே நேரத்தில் ஆணாதிக்கத்தை துஷ்பிரயோகம் செய்து அதன் மூலம் பெண்கள்மீது வன்முறையையும் அடக்குமுறையையும் பிரயோகித்தல் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. முற்காலத்தில் மூட நம்பிக்கைகள் மூலமும் ஆண்களின் சுய நலத்திற்காகவும் ஆணாதிக்க துஷ்பிரயோகம் மூலம் பெண்களை ஒடுக்கினர். ஆனால் இருபாலாரினதும் திறமைகளை அறிந்து செயலாற்றவேண்டிய காலகட்டம் இது.
இந்தத் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரல்கொடுக்க முனைந்து மேற்கத்தேய பாணியில் பெண்களைத் துாண்டிவிடல், ஆணுடன் போட்டி போட வைத்தல், ஆண்பிள்ளையைப்போல் பெண்பிள்ளையை வளர்த்தல் என்பன ஆரோக்கியமான நிகழ்வுகளாகத் எனக்குத் தெரியவில்லை. இது ஆண் பெண் பகையை மேலும் அதிகரிக்கும் என்றே கருதுகிறேன். பொதுவாக தன் துணையை மதித்தல், சமத்துவம் பேணல் என்பன ஓரளவு கற்றவரிடையே தாராளமாகக் காணலாம். அதாவது இங்கு பெண்களின் இயல்பையும் அவர்களின் நடத்தைக் கோலங்களையும் தெளிவாகப் புரிந்து, நிதானமான விவாதங்கள், புரிந்துணர்வு நடவடிக்கைகள் மூலம் இந்த மதிப்பும் சமத்துவமும் பேணப்படுகிறது.
பெண்களிடம் பொதுவாக போட்டி பொறாமை என்பன ஆண்களை விட அதிகாமகக் காணப்படும். இதனால் ஏற்படும் சர்ச்சைகளைத் தவிர்க்க ஆணாதிக்கத்தை தக்க முறையில் பிரயோகிக்க வேண்டியது அவசியம். ஒரு ஆணின் மூளை ஒரு விடயத்தில் குவிக்கப்பட்டு அதில் சிறப்பாக தொழிற்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது ஆனால் பெண்ணின் மூளைக்கு பல விடயங்களில் கவனம் செலுத்தும் தன்மை இருக்கிறது. இது மனதின் நிலையற்ற தன்மைக்கும் தேவையற்ற ஆசைகளுக்கும் வழிவகுக்கும். இதைத் தவிர்க்கவும் ஆணாதிக்கம் அவசியம்.
பிரச்சினைகளற்ற சமத்துவமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஆணாதிக்கத்தின் துஷ்பிரயோகத்தை தவிர்ப்பதற்கும், ஆண் பெண் இருபாலாரினதும் தனித்துவமான திறமைகளை வளரத்து அதன் உச்ச பயனை சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படுத்தவும், சிறந்த வழி ஒரு நல்ல கல்வி முறையை நடைமுறைப்படுத்தலே ஆகும். அத்துடன் எமது கலாசாரத்திற்கேற்ப அதை வடிவமைக்க வேண்டியது அவசியம். மாறாக வேறொரு கலாசாரத்தைத் தழுவிய கல்வியமைப்பைப் பின்பற்றினால் அது எம்மவரிடையே ஆண் பெண் விடயத்தில் இடைவெளியை மேலும் அதிகரிப்பதோடு பல்வேறு பட்ட பிரச்சினைகளை உருவாக்கும்.