06-13-2005, 06:48 PM
Mathan Wrote:பிறாமணர யார் மதிக்கினமண்ணா. அவைக்கு வேற வேலையள் இல்லாம சும்மா வாய் நிறைய அலட்டிட்டு காசு வாங்கிக்கொண்டு சொகுசா இருக்குதுகள் இங்க வெளிநாட்டில. ஆனா நீங்க சொல்லுறது சரிதானண்ணா உவையள உதிர்க்கிறத விட எங்கட மானங்கெட்ட சனங்களின்ர காதில ஒழுங்கா மந்திரத்த ஊதோணமண்ணா அப்பதான் உதுகள் திருந்துங்கள்.Niththila Wrote:இந்துக் கடவுள்கள் பற்றி இவ்வளவு இழிவான கருத்துகளை களத்தில முன் வைக்கிறீங்களே இதுக்கெல்லாம்; என்ன ஆதாரம் வேதங்ளா உபநிடதங்களா.
வேதங்களும் உபநிடதங்களும் வர்க்க பேதங்களும் புராண கதைகளும்; பிற்காலத்தில ஆரியர்களால எமது சமயத்தில புகுத்தப்பட்டவை தானே.
இந்து கடவுள் எந்த இட்த்தில தன்னை இப்படித்தான் கும்;பிடவேணும்; எண்டு எங்காவது கட்டளை போட்டிருக்கிறாரா
தயவு செய்து பிராமண எதிர்ப்பையும் இந்து கடவுள் எதிர்ப்பாக மாற்ற வேண்டாம்
அடுத்தது இந்து மதம் ஒரு வாழ்வியல் தத்துவமே தவிர எந்த விதத்திலயும் எங்கள் மேல் தேவையற்ற சட்ட திட்டங்களை போட்டு கட்டுப்படுத்தவில்லை
இந்து மதத்தில் கடவுள் ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்பதோடு கடவுளுக்கு இதுதான் என்று ஒரு குறிப்பிட்ட உருவம் இல்லாதவர் அப்படியான கடவுளை எமக்கு பிடித்த உருவமாக கற்பனை செய்து வழிபடலாம் என்பதுதான்.
இனியாவது தயவு செய்து எமது மதத்தை இழிவுபடுத்தும் கருத்துகளை வெளியிட முன்பு ஒரு முறை சிந்தியுங்கள் :mrgreen: :mrgreen: :mrgreen:
இந்தியாவில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் சமுதாய ஏற்றதாழ்வு இருந்ததால் பிராமண எதிர்ப்பு அவசியமாக இருந்திருக்கலாம். அந்த பிராமண எதிர்ப்பை கூட மக்களை தூண்டிவிட்டு வாக்கு வேட்டைகாக பயன்படுத்தியவர்கள் தான் திராவிட தலைவர்கள். அவர்களின் வங்குரோத்து அரசியலை ஈழத்தவரும் நம்ப வேண்டுமா? இலங்கைக்கு பொருத்தமில்லாத பிராமண எதிர்ப்பை நாம் ஏன் காவ வேண்டும்? இலங்ககக்கு பொருத்தமான இந்துமத சீர்திருத்தங்களை மட்டும் பேசலாமே? நித்திலா சொன்னது போல் இந்துமதத்தை இழிவு படுத்துவதை விட சீர்திருத்தம் செய்யலாமே?
அக்கா நீங்க சொல்றது என்னது? வேதங்களும் உபநிடதங்களும் ஆரியருகளால புகுத்தபட்டதெண்டால் அதநம்பித்தானே எங்கட ஆக்கள் அது இதெண்டு முட்டாள்தனமா செய்யுதுகள். உங்கட மதம் இந்துமதமெண்டுறீங்கள் அதான் தமிழற்ற மதமெண்டுறதுக்கு என்ன ஆதாரம் வச்சிருக்குிறீங்கள் சொல்லுங்கக்கா

