06-13-2005, 05:20 AM
poonai_kuddy Wrote:வியாசனண்ணா எனக்கொரு சந்தேகம் :roll: உங்களுக்கு இந்து மதத்தபற்றி நிறை தெரியும் போல இருக்கு அதான் கேக்குறன். எங்கட இந்து மதத்தில நிறையகடவுள்மார் இருக்கினமெல்லோ அதேனெண்டு சொல்லுங்கோவன்.
இந்து மதத்தில்தான் மற்ற எந்த மதத்திலுமில்லாத ஒரு கொள்கை இருக்கிறது அதுதான் இஷ்ட தெய்வக் கொள்கை. கடவுள் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பார்கள் அதாவது எந்த வடிவமாகவும் இருப்பான் என்பதுதான் அதன் நிலைப்பாடு. அனால் எல்லோராலும் கடவுளை காற்றாகவும் ஆகாயமாகவும் நினைத்து வணங்க முடியாது அப்படி ஒருவன் வணங்குவானானால் அவனைதான் ஞானியென்பார்கள்(இதிலொன்றை நீங்கள் கவனிக்க வேனும் ஞானியென்பவன் சகலமும் அறிந்தவனாக இருப்பான் - ஏனெனில் நீங்கள் இடக்கு முடக்கா கேள்வி கேட்பவர்கள்). சாதாரண மனிதர்களால் இப்படி காற்று, அண்ட சராசரத்தை கடவுளாக நினைத்து வ்ணங்குவது கஷ்டமெண்டபடியால்தான் அவனவன் விருப்பப்படி கடவுளை நினைத்து வணங்கலாம் என்று இந்துமதத்தில் சொல்லப்படுகிறது. மற்ற மதத்தைப்போல் இதுதான் கடவுள் என்றும் இப்படித்தான் இருப்பார் என்று மதத்தை மக்களிடம் திணிக்கவில்லை. இதிலிருந்தாவது விளங்கவில்லையா இந்துமதம் மனிதனை மாக்களாகப் பார்க்காமல் மனிதராக பார்க்கிறதென்டு.

